உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் உணவை தவிர்ப்பதற்கு பதிலாக புரோட்டீன் மற்றும் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலமாக நல்ல மாற்றத்தை உணர முடியும். அந்த வகையில் பன்னீரில் அதிகப்படியான புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. மேலும் புதினா உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு தேவையான காரணிகளை கொண்டுள்ளது. இந்த முறை புதினா வைத்து அருமையான பன்னீர் புலாவ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பன்னீர் மசாலா கலவையையும் 20 நிமிடம் அப்படியே ஊற வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று பல் வெள்ளை பூண்டு, ஐந்து சின்ன வெங்காயம், அரை கப் புதினா இலைகள், கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள், காரத்திற்கு ஏற்ப இரண்டு பச்சை மிளகாய், சிறிய துண்டு கல்பாசி, 2 கிராம்பு, இரண்டு ஏலக்காய், சிறிய துண்டு பட்டை இரண்டு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், இரண்டு தேக்கரண்டி கெட்டி தயிர், அரை தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைக்கும் போது தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். தண்ணீர் அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்ததாக ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி இணை மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 10 முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக குக்கரில் மீதம் இருக்கும் அதே எண்ணெயுடன் அரைத்த புதினா விழுதுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். புதினா விழுது சேர்த்த பிறகு இரண்டு நிமிடம் இதமான தீயில் கிளற வேண்டும். இதை அடுத்து நாம் இருபது நிமிடம் ஊற வைத்து இருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஆந்திரா ஸ்பெஷல் பிசரட்டு தோசை ப்ரீ மிக்ஸ்….
இந்த முறை ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக நாம் மசாலா தடவி ஊற வைத்திருக்கும் பன்னீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். குக்கரை லேசாக மூடி இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
இரண்டு விசில்கள் வந்த பிறகு குக்கரின் அழுத்தம் குறைந்து திறக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிலரை கொடுத்து இறக்கினால் சுவையான பன்னீர் புதினா புலாவ் தயார்.