நம் வீட்டில் உள்ள செல்ல குழந்தைகளுக்கு பித்தமான காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி. இதை வைத்து என்ன ரெசிபி செய்தாலும் அதை விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். இந்த முறை உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி வைத்து எப்போதும் போல மசாலா உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு கூட்டு என செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்யலாம் வாங்க. இந்த சாதம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் கொடுத்து விடலாம்.
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் நீலவாக்கில் நறுக்கிய நன்கு பழுத்த தக்காளி பழம் ஒன்றை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி மற்றும் வெங்காயம் ஒருசேர ஒரு சேர வதங்கி வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இரண்டு முதல் மூன்று நிமிடம் மசாலா நன்கு கொதி வந்ததும் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலாவில் உள்ள தண்ணீர் பற்றி உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி நன்கு கெட்டி பதத்திற்கு வந்தால் கூட்டு தயாராக மாறி உள்ளது. இதன் மேல் வரும் போது கைப்பிடி அளவு மல்லி இலை தூவி அப்படியே கூட பரிமாறலாம்.
ஒரு துளி கூட நெய் சேர்க்காமல் வீடே மணக்க மணக்க அவல் வைத்து அருமையான அல்வா ரெசிபி!
ஆனால் இந்த முறை இதனுடன் நன்கு வேகவைத்து ஆறவைத்த சாதத்தை சேர்த்து ஒரு முறை கிளறி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் தயார். இந்த சாதம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கொடுத்து விடலாம்.
இந்த சாதம் சாப்பிடும் பொழுது சைடிஷ்ஷாக எந்த காய்கறியும் தேவைப்படாது. சாதத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள்.