ஒரு கப் இட்லி மாவு போதும்… அருமையான பூரண குழிப்பணியாரம் தயார்!

இட்லி மாவு வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை செய்தால் சில நேரங்களில் சாப்பிடுவதற்கு சலித்து விடும். அதே இட்லி மாவு வைத்து பணியாரம் செய்யும் பொழுது சற்று வித்தியாசமாகவும் சாப்பிடும் ஆர்வத்தையும் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும். அதிலும் பூரணம் வைத்து குழிப்பணியாரம் செய்யும் பொழுது சுவை மேலும் அசத்தலாக இருக்கும். இந்த பூரண குழிப்பணியாரம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

முதலில் குழிப்பணியாரத்தின் உள்ளே வைப்பதற்கான பூரணத்தை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வரை வெங்காயத்தை வேக வைக்க வேண்டும். இதனுடன் மூன்றில் இருந்து நான்கு உருளைக்கிழங்குகளை நன்கு வேகவைத்து அதன் தோள்களை நீக்கி மாவாக வசித்து வைத்துக் கொள்ளவும்.


அந்த உருளைக்கிழங்கு மாவை கடாயில் சேர்த்து நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இந்த கலவையின் அரை தேக்கரண்டி உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இப்பொழுது இந்த உருளைக்கிழங்கு மசாலாவை சிறிது நேரம் ஆறவைத்து அதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கப் இட்லி மாவில் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இட்லி மாவு கெட்டியாக இருக்கும் பட்சத்தில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இப்பொழுது பணியாரக் கல்லில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடு படுத்தலாம். அதில் நாம் கலந்து வைத்திருக்கும் இட்லி மாவை பாதி அளவிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின் உருளைக்கிழங்கு மசாலாவை ஒவ்வொரு பணியார குழியிலும் அரிசி மாவிற்கு மேல் வைத்து விட வேண்டும்.

மீண்டும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு மேல் இட்லி மாவை ஊற்றிக் கொள்ளலாம். இப்படி ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து பணியார குழிகளையும் நிரப்ப வேண்டும். அதன்பின் பணியார கடாயை மூடி மூன்று நிமிடம் வேக வைக்க வேண்டும்.

ஒரு கப் அரிசி மாவு போதும்.. ஸ்ரீலங்காவின் மிக ஃபேமஸான இனிப்புத் தொதல் செய்யலாம் வாங்க….

பணியார கல்லில் நல்லெண்ணெய், அல்லது நெய் சேர்த்தால் சுவை மேலும் அருமையாக இருக்கும். மூன்று நிமிடம் கழித்து பணியாரத்தை மற்றொருபுறம் திருப்பி பொன்னிறமாக மாறும் வரை வேக வைக்க வேண்டும். இப்படி முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை நன்கு பொறித்து எடுத்தால் சுவையான பூரண குழி பணியாரம் தயார்.

இந்த குழிப்பணியாரத்திற்கு காரமாக தக்காளி சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை மேலும் அருமையாக இருக்கும். மாலை நேரங்களில் டீ,காபி குடிக்கும் சமயங்களில் இது போன்ற குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம்.

Exit mobile version