ரோட்டு ஓர கடைகளில் மாலை நேரங்களில் கிடைக்கும் பிரைட் ரைஸ் தனி வாசத்துடன் அதிரடியான சுவையில் இருக்கும். ப்ரைட் ரைஸ் என்றாலே பொதுவாக சிக்கன் ஃபிரைட் ரைஸ் தான். இந்த முறை சிக்கன் பயன்படுத்தாமல் உருளைக்கிழங்கு வைத்து அருமையான உருளைக்கிழங்கு ப்ரைட் ரைஸ் வீட்டிலேயே செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் இந்த உருளைக்கிழங்கு ப்ரைட் ரைஸ் செய்வதற்கு உருளைக்கிழங்குகளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நமக்கு தேவையான அளவு உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோள்கள் நீக்கி எடுத்துக் கொள்ளலாம்.
அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கறி மசாலா, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து ஊற வைக்க வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை அதனுடன் சேர்த்து மூடி போட்டு நன்கு பொன்முறுகள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம், ஐந்து பல் வெள்ளை பூண்டு தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்க வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் வாசனைக்காக ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கி வரும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயம் மட்டும் போதும்… மூன்று வேளையும் அசத்தும் தொக்கு ரெசிபி இதோ!
இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். இந்த நேரத்தில் வடித்து ஆற வைத்த சாதம் அடுத்து முன்னதாக பொறித்து எடுத்த உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக அனைத்தையும் ஒரு சேர வரும் வரை நன்கு சிலரி கொள்ள வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு ப்ரைட் ரைஸ் தயார்.