வாய்வு பிடிப்பு, வாய்வு தொல்லையா? பூண்டு வாசனையே தெரியாமல் அருமையான வெள்ளை பூண்டு சாதம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி உருளைக்கிழங்கு, முட்டை போன்ற உணவுகளை சாப்பிடும் பொழுது சில நேரங்களில் வாய்வுத் தொல்லை ஏற்படுவது வழக்கம்.. இதனால் வயிறு வலி, வயிற்று உபாதைகள் ஏற்பட்டு சிரமப்பட நேரிடும். அந்த நேரங்களில் பூண்டு சாதம் அருமருந்தாக அமையும். அருமையான நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட இந்த பூண்டு சாதம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு கப் பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளைத்துண்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். இதனுடன் 10 முந்திரி பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக கைப்பிடி அளவு புதினா, காரத்திற்கு ஏற்ப 4 முதல் 5 பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பச்சை மிளகாய் பாதி வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி பழம் நன்கு வதங்கியதும் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளலாம். இந்த கலவையில் தண்ணீர் ஏதும் சேர்க்காமல் மிதமான தீயில் மூடி போட்டு இரண்டு நிமிடம் வரை வேக வைக்க வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சம்பா ரவா கிச்சடி!

மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் கைபிடி அளவு கொத்தமல்லி தூவி கலந்து கொள்ளலாம். இறுதியாக நாம் படித்து ஆற வைத்திருக்கும் சாதத்தை கடாயில் சேர்த்து கிளற வேண்டும்.

சாதத்தை முன்னதாகவே உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ள வேண்டும். சாதத்தை கிளரும் பொழுது தேவைப்பட்டால் உப்பு மேலும் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான வெள்ளைப்பூண்டு சாதம் தயார். இந்த சாதத்தில் பூண்டு சற்று அதிகமாக சேர்த்திருந்தாலும் அதற்கு இணையாக மல்லி, புதினா போன்றவற்றை சேர்த்திருப்பதால் பூண்டின் வாசனை தெரியாமல் சாதம் அருமையாக இருக்கும்.