திடீரென முடி கொட்டும் பிரச்சனையா? தினமும் ஒரு தேக்கரண்டி இந்த பொடி போதும்!

முடி உதிர்வு பிரச்சினை தொடர்ந்து நாளுக்கு நாளாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பள்ளி குழந்தைகள் முதல் நடுத்தர மக்கள் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை இருந்து வருகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து கிடைக்காததன் காரணமாக முடி பலகீனமடைந்து முடி உதிர்வு, அடர்த்தி குறைபாடு, வளர்ச்சியின்மை என பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை சரி செய்யும் விதமாக வீட்டிலேயே உள்ள பொருட்கள் வைத்து பொடி ஒன்று தயார் செய்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்தும் பொடி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு அகலமான கடாயில் அரைக்கப் பிளாக் சீட் சேர்த்து நன்கு பொறிந்து வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி உளுந்து சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு தேக்கரண்டி பொரிகடலை சேர்த்து வறுத்து தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். இதை அடுத்து இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து அதை தட்டிற்கு மாற்றிவிட வேண்டும்.

மீண்டும் அதை கடாயில் ஒரு தேக்கரண்டி என்னை சேர்த்து சூடானதும் பத்து பல் வெள்ளை பூண்டு, , காரத்திற்கு ஏற்ப 10 காய்ந்தவர்கள் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இறுதியாக இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது நாம் வதக்கிய அனைத்து பொருட்களும் சிறிது நேரம் ஆரம்பிக்க வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வதக்கிய வத்தல், அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். வத்தல் பாதியாக அரைப்பட்டதும் நாம் முதலில் வருத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும்.

புரோட்டின் சத்து நிறைந்த கொங்கு நாட்டு ஸ்பெஷல் பச்சை பயிறு ரசம்!

அடுத்ததாக நம் எண்ணையில் வதக்கிய பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து இதனுடன் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளலாம். இப்பொழுது இறுதியாக உப்பு சரிபார்த்து கூடுதலாக உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அருமையான ப்ரோட்டீன் பொடி தயார். இந்த பொடி இட்லி, தோசை இவற்றிற்கு மட்டுமல்லாமல் சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி கட்டாயமாக சாப்பிட்டு வரும்பொழுது உடலுக்கு தேவையான முழு ஊட்டச்சத்தும் கிடைத்து முடி உதிர்வு குறைந்து நல்ல வளர்ச்சியை பார்க்க முடியும்.