கல்யாண வீட்டு பந்தி ஸ்பெஷல் தித்திக்கும் பைனாப்பிள் கேசரி!

கல்யாண விருந்து என்றாலே தடபுடலாகத் தான் இருக்கும். வாழை இலை தழும்ப தழும்ப வடை, பாயசத்துடன் அறுசுவையும் நிறைந்திருக்கும். அதிலும் முதலில் பரிமாறப்படும் இனிப்பிற்கு தனி மதிப்பு தான். கல்யாண விருந்தில் மட்டுமே கிடைக்கும் இந்த பைனாப்பிள் கேசரியை இனி நம்ம வீட்டு விசேஷ நாட்களிலும் செய்து மகிழலாம் வாங்க. பைனாக்கில் கேசரி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..

இந்தக் பைனாப்பிள் கேசரி செய்வதற்கு ஒரு கப் ரவை, ஒன்றரை கப் சர்க்கரை, நன்கு பொடியாக நறுக்கிய இரண்டு கப் பைனாப்பிள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 முந்திரிப்பருப்பு, 10 கிறிஸ்மஸ் பழங்களை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் மீதம் இருக்கும் அதே நெயில் ஒரு கப் ரவையை சேர்த்து வறுக்க வேண்டும். எண்ணெயுடன் சேர்ந்து ரவையை மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ரவைக்கு மூன்று கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். ரவை நன்கு வந்ததும் ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் சர்க்கரை சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.

பேமஸ் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் பட்டர் தந்தூரி சிக்கன்! அசத்தலான ரெசிபி இதோ…

சர்க்கரை நன்கு கரைந்து ரவையுடன் சேர்ந்து வரும்பொழுது இரண்டு கப் பைனாப்பிள்களை அரைத்து அந்த விழுதினை ரவையுடன் சேர்த்து கலக்க வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய ஒரு சிறிய துண்டு பைனாப்பிள், வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொடுத்து இறக்கி விடலாம்.

மேலும் சுவையை கூட்டுவதற்காக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவை சிறப்பாக இருக்கும்.