தொடர் மலையை தொடர்ந்து வீடுகளில் சளி, காய்ச்சல், பசியின்மை போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு இருக்கும். தொடர்ந்து ஒரே மாதிரியாக ரசம் சாப்பிட்டு முகம் சுளிக்கும் நேரங்களில் சற்று வித்தியாசமாக ரசம் வைத்து வாய்க்கு இதமாக சாப்பிட விரும்புபவர்களுக்கு இந்த பைனாப்பிள் ரசம் மிகவும் உதவியாக இருக்கும். வாங்க எளிமையான முறையில் பைனாப்பிள் வைத்து ரசம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் இரண்டு துண்டு பைனாப்பிள்களை நன்கு பொடியாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதுகளாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் மீண்டும் இரண்டு துண்டு பொடியாக நறுக்கிய பைனாப்பிள், பொடியாக நறுக்கிய இரண்டு பழுத்த தக்காளி பழங்கள், கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி, காரத்திற்கு ஏற்ப 4 பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு குக்கரின் அரை கப் துவரம் பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு கலந்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளலாம். பருப்பு சீக்கிரமாகவும் குறைவாகவும் வந்து வருவதற்காக அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
பருப்பு வெந்ததும் அதை மீண்டும் ஒருமுறை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது முதலில் உள்ள கலவை நன்கு கொதித்து வரும் நேரத்தில் வேகவைத்த பருப்பு கலவை பசியலை சேர்த்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு வைத்து பச்சை மிளகாய் கார வறுவல்!
இதனுடன் எலுமிச்சை பல அளவு ஊற வைக்க புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த கலவை ஒரு கொதி வரும் நேரத்தில் நாம் முதலில் அரைத்து வைத்திருக்கும் பைனாப்பிள் விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக சுவைக்கேற்ப உப்பு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த ரசம் ஒருமுறை கொதிக்கும் பொழுது தேவையான அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.