அதிரடியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி… இன்ஸ்டன்ட் புளியோதரை மிக்ஸ்! காரசாரமான ரெசிபி…

தினமும் விதவிதமான லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்து கொடுத்து அசத்தும் இல்லத்தரசிகளுக்கு இந்த புளியோதரை மிக்ஸ் ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த பொடி தயார் செய்து வைத்துவிட்டால் சூடான சாதத்தில் 5 நிமிடத்தில் கிளறி விடலாம். அடுத்ததாக அதே பொடி வைத்து தோசை, இட்லி என வைத்துக் கூட சாப்பிடலாம். வாங்க கரம் சற்று அதிகமாக புளிப்பு சற்று தூக்கலாக பல நாள் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் புளியோதரை மிக்ஸ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு ஆரஞ்சு பல அளவிற்கு புளி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு அகலமான கடாயில் சேர்த்து சிறிது நேரம் சூடு படுத்தி எடுத்துக் கொள்ளலாம். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து புளியை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்க வேண்டும்.

அடுத்ததாக அதை கடாயில் மூன்று தேக்கரண்டி தனியா, இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மசாலா பொருட்களிலிருந்து வாசனை வந்த பிறகு மூன்று தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். எள் நன்கு படபடவென பொரிந்து வரும் நேரத்தில் நாம் அடுத்த அனைத்து பொருட்களையும் தனியாக ஒரு தட்டிற்கு மாற்றி விடலாம்.

அடுத்ததாக அதே கடாயில் காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் 10 முதல் 15, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து அதே தட்டிற்கு மாற்றிவிடலாம். இதனுடன் நான் முதலில் வறுத்த புளி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் கடாயில் இரண்டு தேக்கரண்டி கல்லுப்பு வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது நாம் அடுத்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் சூடு ஆற வைக்க வேண்டும். இதை அடுத்து நாம் வருத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜார்ஜ் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது இன்ஸ்டன்ட் புளியோதரை மிக்ஸ் தயார்.

செஃப் தாமு அப்பா ஸ்பெஷல் பழ மிளகாய் பன்னீர் வருவல்! சைவ பிரியர்களுக்கு கொண்டாட்டமான ரெசிபி…

இப்பொழுது ஒரு சிறிய கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, மூன்று தேக்கரண்டி வேர்க்கடலை, இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் புளியோதரை மிக்ஸ் சேர்த்து எண்ணையோடு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். இப்பொழுது இறுதியாக சூடான சாதம் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான புளியோதரை தயார்.

Exit mobile version