சைவ பிரியர்களும் அசைவ உணவுகளுக்கு இணையாக வகை வகையாக சமைத்து சாப்பிடுவது திறமைதான். அதிலும் முட்டை, காளான், பன்னீர் வைத்து அசைவத்துடன் போட்டி போடும் வகையிலும் சுவையான ரெசிப்பிகளை செய்து அடுக்கலாம். இந்த வகையில் ப்ரோடீன் சத்து நிறைந்த பன்னீர் வைத்து மிகவும் பிரபலமான செஃப் தாமு அவர்களின் நேர்த்தியான சுவையில் பழ மிளகாய் பன்னீர் வருவல் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதில் பச்சை மிளகாய் பயன்படுத்தும் பொழுது பச்சையாக இருப்பதை பயன்படுத்தாமல் சற்று பழுத்த மிளகாய்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்படி மூன்று பழுத்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கொடியாக நறுக்கிய சிறிய துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கிய ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
எப்போதும் சிவக்க சிவக்க தான் முட்டை சாதமா? வாங்க இந்த முறை பச்சை முட்டை சாதம்! ரெசிபி இதோ…
அடுத்ததாக பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். பன்னீர் சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இதில் இறுதியாக கால் கப் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
அடுப்பை அணைத்து அதை சூட்டில் மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால் சுவையான பல மிளகாய் பன்னீர் வருவல் தயார்.