இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத ஆந்திரா ஸ்பெஷல் பிசரட்டு தோசை ப்ரீ மிக்ஸ்….

தோசை மாவு இல்லாத சமயங்களில் தோசை சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு கோதுமை மாவு அல்லது ரவை வைத்து இன்ஸ்டன்ட் தோசை செய்வது வழக்கம். இந்த முறை சற்று வித்தியாசமாக ஆந்திரா ஸ்பெஷல் பிசரட்டு தோசை அதாவது பச்சை பயிறு தோசை செய்து சாப்பிடலாம் வாங்க. இந்த தோசை செய்வதற்கு பச்சை பயிறு ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது பிசரட்டு தோசை மாவு ப்ரீ மிக்ஸ் தயாரிப்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் பாசிப்பயிறு, 1/4 கப் அரிசி சேர்த்து நன்கு கலைந்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து மீண்டும் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக சுத்தமான துணியில் ஊற வைத்த பாசிப்பயிறு மற்றும் அரிசியை சேர்த்து நன்கு காய வைத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு கடாயில் சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் இரண்டு கொத்து கருவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், காரத்திற்கு ஏற்ப மூன்று அல்லது நான்கு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக நம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டிய பாசிப்பயிறு மற்றும் அரிசியை கடாயில் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக நாம் வறுத்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் வறுத்து ஆரம்பித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து ஆரம்பித்து கொள்ளலாம். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ளலாம். இப்பொழுது பிசிரட்டு செய்வதற்கு தேவையான மாவு தயார்.

அடுத்ததாக இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி இதனுடன் தேவையான அளவு தண்ணீர், நன்கு புளித்த கெட்டி தயிர் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொடுத்து ஐந்து நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.

அடுப்பே இல்லாமல் ராஜஸ்தானி ஸ்டைல் கொய்யாப்பழம் சட்னி!

இதில் நம் தேவைக்கேற்ப பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை அல்லது முருங்கை இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம்.

இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்து நம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை வட்ட வடிவில் திரட்டி கொள்ள வேண்டும். முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான பாசிப்பயிறு பிசரட்டு தயார். இதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.