சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளின் போது பசியின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காரசாரமான மிளகு சட்னி!

உடல் பலகீனமாக அல்லது உடல் நல குறைவில் இருக்கும் பொழுது பொதுவாக நமக்கு சாப்பிட தோன்றுவதில்லை. மேலும் காச்சல், சளி போன்ற உடல் உபாதைகளின் போது வாய் கசப்பு, அஜீரண கோளாறு, பசியின்மை போன்றவற்றின் காரணமாக பசி ஏற்படுவதும் இல்லை. இது போன்ற நேரங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு குறைவாக இருந்தாலும் உடனே ஜீரணமாகி நல்ல புத்துணர்ச்சியை தர வேண்டும். அந்த வகையில் சற்றே காரம் தூக்கலாக உள்ள மிளகு சட்னி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி மிளகு, காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று காய்ந்த வத்தல் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்ததாக நன்கு பழுத்த தக்காளி பழம் மூன்று அல்லது நான்கு பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி நன்கு வதங்கி வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி கல் உப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி மசிந்து வரும் வரை நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

இப்போது வதக்கிய அனைத்து பொருட்களும் சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது மிளகு சட்னி தயார். இந்த சட்னிக்கு ஒரு சிறிய தாளிப்பு செய்து கொள்ளலாம்.

6 முதல் 7 மணி நேரம் ஆனாலும் கெட்டுப் போகாத ரயில்வே தேங்காய் சட்னி ரெசிபிகள்!

அதற்காக ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியோடு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மிளகு சட்னி தயார்.

இந்த சட்னிக்கு சூடான இட்லி, தோசை, சாதம் என அனைத்திலும் வைத்து சாப்பிடலாம். பசி இன்மை, வாய் கசப்பு போன்ற நேரங்களில் இது போன்ற சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை அதிகமாகவும் எளிதில் ஜீரணம் அடைந்து புத்துணர்ச்சியும் கொடுக்கும்.

Exit mobile version