6 முதல் 7 மணி நேரம் ஆனாலும் கெட்டுப் போகாத ரயில்வே தேங்காய் சட்னி ரெசிபிகள்!

அந்த காலத்தில் நீண்ட நேர பயணத்தின் போது வீட்டில் இருந்து சமைத்து உணவுகளை பொட்டணம் செய்து எடுத்துச் செல்லும் பழக்கம் பலருக்கு இருந்து வந்துள்ளது. அப்படி பயணத்தின் போது நாம் எடுத்து செல்லும் சாப்பாடு கெட்டுப் போகாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் அதன் முதல் முக்கியத்துவம் ஆகும். ரயில்வே பயணத்தின் போது தேங்காய் சட்னி சாப்பிட ஆசையாக இருந்தாலும் அந்த சட்னி சில நேரங்களிலேயே கெட்டுவிடும். இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி அம்சமான பொருத்தமாக இருக்கும். ஆனால் எளிதில் கட்டிவிடும் காரணத்தினால் அதை யாரும் எடுத்துச் செல்வதில்லை. இப்பொழுது 6 முதல் 8 மணி நேரம் கெட்டுப் போகாத ரயில்வே தேங்காய் சட்னி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து முதல் ஆறு தேக்கரண்டி பொரிகடலை, ஒரு கப் தேங்காய் துருவல், காரத்திற்கு ஏற்ப 4 முதல் 5 பச்சை மிளகாய், 3 பல் வெள்ளை பூண்டு, , ஒரு சிறிய துண்டு இஞ்சி, கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, சிறிய நெல்லிக்காய் அளவு புளி, அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சட்னிக்கு அரை தேக்கரண்டி எண்ணெய் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கிளறினால் சுவையான ரயில்வே தேங்காய் சட்னி தயார்.

இந்த முறை சற்று எளிமையான மற்றொரு தேங்காய் சட்னி ரெசிபி பார்க்கலாம். ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

கல்யாண வீட்டு ஸ்பெஷல் சேமியா ரவா கிச்சடி! அருமையான ரெசிபி இதோ…

இப்பொழுது வதக்கிய பச்சை மிளகாயை ஒரு கட்டிற்கு மாற்றிவிடலாம். மீதம் இருக்கும் அதே எண்ணெயில் ஒரு கப் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரின் நாம் வறுத்த தேங்காய் துருவலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் அரைக்கப் பொரிகடலை, எண்ணெயில் வறுத்த பச்சை மிளகாய், சிறிய எலுமிச்சை பழ அளவு புளி, 5 சின்ன வெங்காயம், அரை தேக்கரண்டி சீரகம், 5 பல் வெள்ளை பூண்டு, அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து மையாக அரைத்து இறக்கினால் சுவையான மற்றொரு தேங்காய் சட்னி தயார்.

Exit mobile version