புத்தாண்டை இனிப்புடன் தொடங்க நினைப்பவர்களுக்கு இனிப்பான கோவா பாயாசம்!

இன்னும் சில நாட்களில் இந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு புதுமையாக துவங்க உள்ளது. தொடங்கும் இந்த புத்தாண்டு மகிழ்ச்சியை அள்ளித் தர வேண்டும் என நினைத்து இனிப்புடன் துவங்குவது வழக்கம். எந்த முறை வழக்கமாக செய்யும் பாயாசத்தை விட சற்று வித்தியாசமாகவும் சுவை கூடுதலாகவும் சாப்பிட விரும்புபவர்களுக்கு கோவா பாயாச ரெசிபி. எளிமையான முறையில் வீட்டிலேயே சுவையான பாயாசம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து பத்து முதல் 15 முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக மீதம் இருக்கும் அதே நெய்யில் ஒரு கப் சேமியா சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதில் ஒரு கப் பால் சேர்த்து அப்படியே வேக வைத்துக் கொள்ளலாம். பால் நன்கு கொதித்து வரும் நேரத்தில் நான்கு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்து வேகவைத்துக் கொள்ளலாம். வெந்து வரும் நேரத்தில் இரண்டு சிட்டிகை குங்கும பூவை பாலில் கலந்து அதன் தண்ணீர் மட்டும் கலந்து வேகவைத்து கொள்ளலாம்.

உடல் எடை குறைத்து புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு புதினா பன்னீர் புலாவ் ரெசிபி!

பாலில் சேமியா நன்கு வெந்து கெட்டியாக வரும் நேரத்தில் ஒரு கப் கோவா சேர்த்துக்கொள்ள வேண்டும். கோவா சேர்த்து நன்கு கிளறி கொடுத்த பிறகு வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக நாம் முதலில் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து கிளறி கொள்ள வேண்டும். சுவையான கோவா பால் பாயாசம் தயார். இந்த புத்தாண்டுக்கு இனிப்புடன் இனிமையாக துவங்கலாம்.