குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் இத்தாலியன் சாஸ் பாஸ்தா ரெசிபி!

தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என தொடர்ந்து ஒரே விதமான சாப்பாட்டை சாப்பிடும் குழந்தைகள் சில நேரங்களில் வித்தியாசமாக சுவையானதாக சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். அந்த நேரங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த முறை சற்று வித்தியாசமாக ரெஸ்டாரண்டுகளில் கிடைக்கும் இத்தாலியன் ஸ்டைல் சாஸ் பாஸ்தா ரெசிபியை நம் வீட்டில் உள்ள குட்டி குட்டிகளுக்கு செய்து கொடுத்து மகிழ்விக்கலாம் வாங்க. இந்த ரெசிபி செய்வதற்கான எளிமையான விளக்கம் இதோ…

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு சூடானதும் ஒரு கப் பாஸ்தாவை அதில் சேர்த்துக் கொள்ளலாம். பாஸ்தா வேகும்வரை தண்ணீரில் இருக்க வேண்டும்.

அதன் பிறகு பாஸ்தாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்த பிறகு பாதியாக நறுக்கிய மூன்று தக்காளிப்பழம், சிவப்பு நிற குடைமிளகாய் நான்காக நறுக்கிய ஒரு குடைமிளகாய் சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும்.

தக்காளிப்பழம் மற்றும் குடைமிளகாயை எண்ணெயோடு சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி சில்லி பிளஸ், ஒரு தேக்கரண்டி சில்லி சாஸ், இரண்டு துண்டு சீஸ் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவை அரைக்கும் பொழுது அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் அதே கடாயில் ஒரு சிறிய துண்டு வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய 10 வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

இரண்டு உருளைக்கிழங்கு போதும்.. ரவா ரோஸ்ட் போல மொறு மொறு தோசை செய்வதற்கான ரெசிபி இதோ!

அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.வெங்காயம் மற்றும் பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் நாம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

மிதமான தீயில் தக்காளி விழுது நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் ஊறவைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்தாவை சேர்த்துக் கொள்ளலாம். பாஸ்தா சேர்த்து கிளறும் பொழுது வெள்ளை மிளகு தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் பாஸ்தா ரெடி.