கோதுமை, ரவை சேர்க்காமல் புளிக்க வைக்காமல் நொடியில் தயாராகும் பாசிப்பருப்பு தோசை!

வீட்டில் இட்லி மாவு இல்லாத சமயங்களில் கோதுமை அல்லது ரவை வைத்து அருமையான தோசை செய்வது வழக்கமான ஒன்று. . ஆனால் இந்த முறை கோதுமை மற்றும் ரவை சேர்க்காமல் மாவு அரைத்து பல மணி நேரம் புளிக்க வைக்காமல் நொடியில் தயாராகும் சத்து நிறைந்த பாசி பருப்பு தோசை செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் இந்த தோசை செய்வதற்கு ஒரு கப் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து நன்கு ஊறி இருக்கும் பாசிப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு காய்ந்த வத்தல், இரண்டு கொத்து கருவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை ஒரு தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இதில் ஒரு தேக்கரண்டி துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது தோசை செய்வதற்கு பாசிப்பருப்பு மாவு தயாராக உள்ளது.

ஒரே மாதிரியாக தேங்காய் சாதம் செய்யாமல் சற்று வித்தியாசமாக காரசாரமான தேங்காய் சாதம்!

எப்போதும் போல தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்கு சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இப்பொழுது நமது விருப்பத்திற்கு ஏற்ப முறுமுறுவென தோசை செய்து கொள்ளலாம். சுவையான மற்றும் சத்து நிறைந்த பாசிப்பருப்பு தோசை தயார். இந்த தோசைக்கு காரம் சற்று அதிகமாக தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னி வைத்து சாப்பிடும்பொழுது சுவை சிறப்பாக இருக்கும்.