சமைக்கத் தெரியாதவர்கள் கூட 15 நிமிடத்தில் எளிமையாக சமைக்கக்கூடிய ராஜஸ்தான் ஸ்பெஷல் பாசிப்பருப்பு அல்வா!

சமைக்கத் தெரியாதவர்கள் கூட எளிமையான முறையில் இனிப்பு செய்ய வேண்டும் என ஆசைப்படும்பொழுது இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபி சுவையானதாக மட்டும் இல்லாமல் பாசிப்பருப்பு வைத்து செய்வதன் மூலமாக சற்று நிறைந்ததாகவும் இருக்கும். வாங்க ராஜஸ்தான் ஸ்பெஷல் பாசிப்பருப்பு அல்வா எளிமையான முறையில் நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபி விளக்கம் இதோ…

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கைப்பிடி அளவு முந்திரி பருப்பு, கைப்பிடி அளவு பாதாம் பருப்பு, கைப்பிடி அளவு உலர்ந்த திராட்சை பழம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் மீதம் இருக்கும் நெய்யுடன் கூடுதலாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து ஒரு கப் பாசிப்பருப்பை சேர்த்து நெய்யோடு வருக்க வேண்டும். பாசிப்பருப்பு சமைப்பதற்கு முன்பாக ஒரு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது நெய்யுடன் பாசிப்பருப்பை நன்கு அடர்ந்த பொன்னிறமாக மாறும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு நன்கு நிறம் மாறியதும் ஒரு கப் பாசிப்பருப்பிற்கு மூன்று கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து குக்கரின் ஆறு முதல் ஏழு விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கப் ரவை போதும்… கேசரிக்கு பதிலாக வாயில் வைத்ததும் கரையும் அல்வா ரெசிபி!

இந்த முறை பாசிப்பருப்பு நன்கு குழைவாக வெந்துவிடும். அடுத்ததாக மத்து கொண்டு மீண்டும் ஒருமுறை வசித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் மூன்று தேக்கரண்டி அளவு அமுல் மில்க் பவுடர் சேர்த்துக்கொள்ள வேண்டும். மில்க் பவுடர் இல்லாத பட்சத்தில் ஒரு கப் பாலை நன்கு சுண்ட காய்ச்சி ஆடையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இனிப்பிற்கு ஏற்ப முக்கால் கப் வெல்லம் அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கைவிடாமல் நன்கு கலந்து கொள்ளலாம். மிதமான தீயில் அடுப்பை வைத்து தொடர்ந்து கிளற வேண்டும். நெய் பிரிந்து மேலே தனியாக வரும் பொழுது இனிப்பு தயாராக மாறிவிட்டது.

இப்பொழுது இதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மேல் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சைகளை சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது சுவையான ராஜஸ்தான் ஸ்டைல் பாசிப்பருப்பு அல்வா தயார்.