ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி சிறப்பு உண்டு. அதிலும் அங்கு பிரசித்தி பெற்ற சில உணவு முறைகளும் தனிச்சிறப்பு தான். அந்த வகையில் நாகர்கோவில் ஸ்பெஷல் கல்யாண வீட்டு பருப்பு தண்ணி குழம்பு. அனைத்து கல்யாண வீடுகளிலும் இந்த குழம்பு கட்டாயமாக பரிமாறப்படுகிறது. இந்த தண்ணிக்குழம்பு நம் வீட்டில் ஒரு முறையாவது செய்து சாப்பிட வேண்டும். கல்யாண வீட்டு ஸ்பெஷல் பருப்பு தண்ணி குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
வெங்காயம், தக்காளி என எதுவும் இல்லாமல் 15 நிமிடத்தில் இந்த குழம்பு எளிமையாக சமைத்து விட முடியும். இதற்காக முதலில் மசாலவை தயார் செய்து கொள்ளலாம் ஒரு மிக்ஸி ஜாரின் ஒரு கப் தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து மிக்ஸியில் நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மசாலா அரைக்கும் போது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதை போல் காரம் சற்று அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் மிளகாய் அல்லது தனி மிளகாய் தூள் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக குழம்பிற்கு தேவையான அளவு துவரம் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பருப்பு வேக வைக்கும் பொழுது அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி சீரகம் சேர்த்து வேகவைத்தால் பருப்பு வாசமாக இருக்கும்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் நாம் வேகவைத்த பருப்பை நன்கு மசித்து கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் நாம் மறைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலாவையும் கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக குழம்பிற்கு தேவையான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது குழந்தை நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் ஒரு கொதி வரும் வரை சூடுபடுத்த வேண்டும். குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடலாம். பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான நாகர்கோவில் ஸ்பெஷல் பருப்பு தண்ணி குழம்பு தயார்.
இந்த குழம்பு சூடான சாதத்துடன் சேர்ந்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். இதனுடன் அப்பளம், நமக்கு பிடித்தமான காய்கறிகள் வைத்து அருமையாக விருந்து போல சாப்பிடலாம். மேலும் இந்த குழம்பு பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் விதத்தில் நல்ல சுவையில் இருக்கும்.