சத்தான பாயாசம் சாப்பிட ஆசையா? வாங்க சிவப்பு அவல் வைத்து நெய் மணக்கும் வாசத்தின் பாயாசம் செய்வதற்கான ரெசிபி இதோ!

விசேஷ நாட்களில் நம் வீடுகளில் இனிப்பு வகைகள் செய்வது வழக்கம். வகை வகையாக பல விதமான உணவு முறைகள் பரிமாறினாலும் பந்திக்கு இறுதியில் வழங்கப்படும் பாயாசத்திற்கு தனி மவுசு தான். இப்படி வழங்கப்படும் பாயாசம் இனிப்பு நிறைந்து தித்திப்பாக மட்டுமில்லாமல் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் சிவப்பு அவல் வைத்து மின் மணக்கும் வாசத்தில் அருமையான பாயாசம் செய்வதற்கான ரெசிபி இதோ..

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் கெட்டியான சிவப்பு அவல் ஒரு கப் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். அவல் நன்கு சூடாகி வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது வறுத்த அவல் சிறிது நேரம் சூடு ஆற வைத்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்று இரண்டாக பரபரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அவல் மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்ததாக அதை கடாயில் மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் கைப்பிடி அளவு தேங்காயை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளலாம். இதனுடன் கைப்பிடி அளவு முந்திரி, பாதாம் பருப்பு, , கருப்பு திராட்சை, வெள்ளரி விதை என நமக்கு பிடித்தமான நட்ஸ் வகைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது வறுத்த இந்த பொருட்களை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். மீண்டும் அதே கடாயில் அரை லிட்டர் கெட்டியான பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பால் நன்கு சூடாகி முறைத்து பொங்கி வரும் நேரத்தில் நாம் வறுத்து பொடி செய்து வைத்திருக்கும் அவல் சேர்த்துக் கொள்ளலாம். அவல் சேர்த்த பிறகு கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும்.

வெங்காயம், தக்காளி என எந்த காய்கறியும் இல்லாமல் அருமையான காரக்குழம்பு செய்ய வேண்டுமா! அசத்தல் குழம்பு ரெசிபி இதோ!

பத்து நிமிடம் கழித்து அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கொள்ளலாம். அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி மில்க் மேட் சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக ஒரு கப் அவளுக்கு முக்கால் கப் வீதம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

சர்க்கரை சேர்த்து இரண்டு முறை கிளறி அடுப்பை அணைத்து விடலாம். இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சிவப்பு அவல் பாயாசம் தயார். இந்த பாயாசம் சுவையானதாக மட்டும் இல்லாமல் சத்து நிறைந்ததாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Exit mobile version