காலநிலை திடீர் திடீர் மாற்றத்தின் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் இந்த மலை தொடர்ந்து கனமழையாகவும் நீடித்து வருகிறது. இப்படி மழை பெய்யும் நேரங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சத்தானதாகவும் மனதிற்கு பிடித்ததாகவும் இருக்கும் பொழுது ஒரு திருப்தி கிடைக்கும். அந்த வகையில் பன்னீர் வைத்து அருமையான கட்லெட் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லெட்டை பன்னீர் வைத்து செய்யும் பொழுது ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கிறது.
ஒரு அகலமான கடாயில் இரண்டு கைக்கட்டி எண்ணெய் சேர்த்து சூடாகவும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வளர்க்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ளலாம்..
அடுத்ததாக ஒரு கப் வேகவைத்த பச்சை பட்டாணி, ஒரு கப் லேசாக துருவிய கேரட், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், ஒரு கப் துருவிய முட்டைக்கோஸ் சேர்த்து எண்ணியோடு நன்கு வதக்க வேண்டும்.
மிதமான தீயில் ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் வதக்கும் பொழுது காய்கறிகள் நன்கு வெந்துவிடும். அடுத்ததாக மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்கிக் கொள்ளலாம்.
மசாலாவின் பச்சை வாசனை சென்ற பிறகு வேக வைத்து மசித்து வைத்திருக்கும் மூன்று உருளைக்கிழங்கு சேர்த்து இறுதியாக வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது வதக்கிய பொருட்களை சிறிது நேரம் சூடு தண்ணிய வைக்க வேண்டும். இதை அடுத்து இந்த மசாலா பொருட்களுடன் 100 கிராம் அளவிற்கு பன்னீரை துருவி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கப் உதிர்ந்த பிரட் துகள்கள், பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிரட் துகள்கள் இல்லாத பட்சத்தில் நாம் சாப்பிடும் ரஸ்கை தூள் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்தால் கட்லெட் தேவையான மாவு தயாராக மாறியுள்ளது. இப்பொழுது இந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்து எடுத்து கட்லெட் வடிவில் வட்டமாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து இரண்டு தேக்கரண்டி கான்பிளார் மாவை தண்ணீரில் கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் அருகில் மற்றொரு தட்டில் தாராளமாக பிரட் துகள்கள் தட்டி பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் வட்ட வடிவில் திரட்டி வைத்திருக்கும் கட்லெட்டுகளை கான்பிளவர் மாவில் ஒரு முறை முக்கி அதன் பிறகு பிரட் துகள்களின் மீது ஒருமுறை திரட்டி எடுத்து தனியாக தட்டில் வைக்க வேண்டும். இதுபோல கட்லெட் அனைத்தையும் ஒரே விதமாக செய்து தட்டில் அடுக்கிக் கொள்ளலாம்.
இப்பொழுது இந்த கட்லெட்டுகளை குறைந்தது அரை மணி நேரம் ஆவது பிரிட்ஜில் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் மாவு மற்றும் பிரட் துகள்கள் ஒன்றாக இறுக்கமாக பிடித்துக் கொள்ளும். அரைமணி நேரம் கழித்த பிறகு மிதமான தீயில் எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்.
முன்னும் பின்னும் பொன்னிறமாக தயாரானதும் இப்பொழுது சுவையான பன்னீர் கட்லெட் தயார். கடைகளில் மாலை நேரங்களில் இது போன்ற கட்லெட்டுகளை வாங்காமல் வீட்டிலேயே செய்யும் பொழுது சுவையானதாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.