10 நிமிடங்களில் நம் வீட்டில் தயாராகும் இனிப்பு வகைகளில் ஒன்று தான் கேசரி. வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வருகை தந்தாலும், வீட்டில் உள்ள நபர்கள் இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டாலும் நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது கேசரிதான். ஒரு கப் ரவை இருந்தால் போதும் தாராளமாக நான்கு முதல் ஐந்து பேர் விரும்பி சாப்பிடும் அளவிற்கு கேசரி தயார். இப்படி அடிக்கடி நம் வீட்டில் செய்யும் கேசரி ஒரே மாதிரியாக செய்யாமல் சற்று வித்தியாசமாக பால் சேர்த்து செய்யும் பொழுது அதன் சுவையும் கூடுதலாக இருக்கும். வாங்க பால் வைத்து அருமையான பால் கேசரி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் மற்றும் ஒரு தேக்கரண்டி ரீபண்ட் ஆயில் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கப் ரவை சேர்த்து நல்ல வாசனை வரும்வரை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் ரவைக்கு நான்கு கப் வீதம் பால் என்பது அளவு. அதன்படி நான்கு கப் பசும்பாலை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். பசும்பால் கிடைக்காத பட்சத்தில் பாக்கெட் பால் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பசும்பால் வைத்து செய்யும் பொழுது சுவை சற்று கூடுதலாகவே கிடைக்கும்.
மிதமான தீயில் கைவிடாமல் பத்து முதல் 15 நிமிடம் கிளரும் பொழுது ரவை நன்கு பாலில் வந்து கெட்டி பதத்திற்கு வந்து விடும். அந்த நேரத்தில் ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் சர்க்கரை என்ற அளவில் படி சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளற வேண்டும்.
6 முதல் 7 மணி நேரம் ஆனாலும் கெட்டுப் போகாத ரயில்வே தேங்காய் சட்னி ரெசிபிகள்!
ஐந்து நிமிடம் கைவிடாமல் கிளறும்பொழுது சர்க்கரை நன்கு கரைந்து ரவையோடு ஒருசேர இணைந்து வரும். இந்த நேரத்தில் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கொள்ளலாம். இந்த நேரத்தில் மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
இப்பொழுது ரவை கடாயில் ஒட்டாத அளவிற்கு தனியாக பிரிந்து வந்தால் கேசரி தயார். இறுதியாக நாம் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பால் கேசரி தயார்.