சூப்பரான சுவையின் பன்னீர் வைத்து அருமையான பொடிமாஸ் ரெசிபி!

பன்னீரில் உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக இதை உணவில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தினமும் பன்னீர் சாப்பிடுவதன் மூலமாக தினசரி தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். பன்னீர் வைத்து ரெஸ்டாரன்ட் சுவையில் பலவிதமான ரெசிபிகள் அடுத்தடுத்து செய்தாலும் மீண்டும் சிறப்பாக செய்யும் அளவிற்கு சில ரெசிபிகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அன்று பன்னீர் வைத்து எளிமையான மற்றும் சுவையான பொடிமாஸ் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு கப் கெட்டி தயிர் எடுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியாத்தூள், ஒரு தேக்கரண்டி பாவ் பஜ்ஜி மசாலா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். இந்த கலவையையும் தயிரோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம்.

அடுத்ததாக மீண்டும் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் வதங்கியதும் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழங்கள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

நல்ல காரசாரமாக செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு! இது ஒன்று போதும்…

இந்த நேரத்தில் நாம் தயார் செய்து வைத்து தயிர் கலவையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் தயிர் கலவையை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் ஒரு கப் பன்னீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பன்னீரை சாதாரணமாக கையில் உடைத்து சிறுசிறு துண்டுகளாக மாற்றி அப்படியே கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் ஒரு கப் அளவிற்கு பால் சேர்த்து இரண்டு நிமிடம் மூடி போட்டு அப்படியே வேக வைக்க வேண்டும். இறுதியாக உப்பு சரிபார்த்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பன்னீர் பொடிமாஸ் தயார். இது சூடான சாதம் சப்பாத்தி என அனைத்திற்கும் தச்சிதமான பொருத்தமாக இருக்கும்.