உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சோம்பேறி டின்னர் ரெசிபி இதோ…

அதிகமான உடல் எடையின் காரணமாக பலவிதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் பலரும் உடல் எடை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் அதற்கான தனியான உணவு கட்டுப்பாட்டுடன் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. இந்த முறை உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் எளிமையான முறையில் சுலபமாக மற்றும் சத்து நிறைந்த சாப்பிடுவதற்கு உதவும் ரெசிபி ஒன்றை விளக்கமாக பார்க்கலாம் வாங்க…

ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சில்லி ஃபிளக்ஸ், பொடியாக நறுக்கிய மூன்று பல் வெள்ளை பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பாதியாக வதங்கியதும் கொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது நாம் வதக்கிய பொருட்களை அடித்து வைத்திருக்கும் முட்டையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை கப் தண்ணீரை துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் இந்த மாவை சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான பன்னீர் முட்டை இட்லி தயார். உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி ப்ரோடீன் சத்து நிறைந்ததாகவும் ஊட்டச்சத்து அளிக்க கூடியதாகவும் கலோரிகள் குறைந்த உணவாக சிறப்பாக அமையும்.

மீன் குழம்பின் அதே சுவையில் ஸ்பெஷல் முட்டை கிரேவி! ரெசிபி இதோ…

இந்த இட்லிக்கு காரமாக சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை சிறப்பாக இருக்கும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் இது போன்ற வித்தியாசமான இட்லிகள் செய்து கொடுத்து அசத்தலாம்.