நம் வீடுகளில் சாதம் மீதம் ஆகும் பொழுது தண்ணீர் சேர்த்து மறுநாள் அதை பழைய சாதமாக சாப்பிடுவது வழக்கமான ஒன்று. . ஆனால் இப்படி சாப்பிடுவது சிலருக்கு சளி போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் பெரும்பாலானோர் இப்பொழுது பழைய சாதம் சாப்பிடுவதை விரும்புவதில்லை. அப்படிப்பட்ட சமயங்களில் பழைய சாதம் வைத்து அதிரடியான சூப்பர் ரெசிபி ஒன்று செய்து கொடுக்கும் பொழுது சுவையில் மயங்கி சாப்பிட்டு விடுவார்கள். வாங்க அந்த ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பழைய சாதம் எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை வடித்து வெறும் சாதத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரு தேக்கரண்டி சீரகம், இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி கான்பிளார் மாவு, கைப்பிடி அளவு சிறுகீரை அல்லது முருங்கைக்கீரை, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு, இரண்டு தேக்கரண்டி தயிர், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இந்த மாவில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளலாம். கான்பிளவர் மாவு இல்லாத பட்சத்தில் அரிசி மாவு கூட சேர்த்து இதை தயார் செய்து கொள்ளலாம்.
இப்பொழுது நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் சேர்த்து நீராவியில் வேக வைக்க வேண்டும். இப்பொழுது இந்த உருண்டை வந்து வரும் நேரத்தில் மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, இரண்டு காய்ந்த வத்தல், பொடியாக பெரிய வெங்காயம், 4 பல் வெள்ளைப்பூண்டுதட்டி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆக 10 நிமிடத்தில் தயாராகும் காலிபிளவர் ரைஸ்! ரெசிபி இதோ…
அடுத்ததாக ஒரு தேக்கரண்டி தக்காளிசாஸ் , ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் ஆவியில் வேகவைத்த சாது உருண்டைகளை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கிளறி கொடுத்து இறக்கினால் சுவையான பழைய சாத ரெசிபி தயார்.