மூன்று பொருள் போதும்…. ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் ஆரஞ்சு குல்பி இனி நம்ம வீட்டிலேயே செய்யலாம்….

பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகள், மால், கடைகளில் மட்டுமே கிடைக்கும் பழங்கள் குல்பி நம் வீட்டிலும் செய்ய வேண்டும் என்பது பலரின் கனவாகவே இருக்கும். ஆனால் அதே சுவையில் வீட்டில் செய்வது சற்று சிரமம் என பலரின் கருத்தாக உள்ளது. இந்த முறை இது போன்ற ஆரஞ்சு குல்பி நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

முதலில் இந்த குல்பி ஐஸ் செய்வதற்கு நன்கு பழுத்த இரண்டு ஆரஞ்சு பழங்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை இரண்டாக நறுக்கி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். அதாவது சதை பத்து தனியாகவும் தோல் தனியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் சதை பகுதியை நன்கு வடிகட்டிக் கொண்டு வடித்து அதன் சக்கை தனியாகவும் சாறு தனியாகவும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் கெட்டியான பாலாடை, அரைக்கப் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு கப் ஆரஞ்சு சாறு, இரண்டு தேக்கரண்டி அதன் சட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த கலவையை மீண்டும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாட்டியின் கை பக்குவத்தில் கிடைக்கும் சுவையும் மனமும் வேண்டுமா? சமையல் டிப்ஸ் இதோ….

இப்பொழுது இந்த சாற்றை நாம் முதலில் பிரித்து எடுத்த ஆரஞ்சு தோளினுள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 5 மணி நேரம் குளிர வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் கழித்து பார்க்கும் பொழுது நமக்கு சுவையான ஆரஞ்சு குல்பி தயார். இப்பொழுது மிக எளிமையான முறையில் சுவையான மற்றும் ஹெல்தியான கலப்படம் கலக்காத ஆரஞ்சு குல்பி நம் வீட்டிலேயே செய்துவிடலாம்.