பொதுவாக அசைவம் சமைக்க வேண்டும் என்றால் அதிக நேரம் தேவைப்படும். அதற்கு காரணம் கறி நன்கு முழுமையாக வந்தால் மட்டுமே அதன் சுவை குழம்பில் இருக்கும். இதனாலே அசைவம் சமைப்பதற்கு குறைந்தது ஒன்று முதல் இரண்டு மணி நேரங்கள் எடுக்கலாம். ஆனால் சின்ன வெங்காயம் சேர்த்து 15 நிமிடத்தில் தயாராகும் அருமையான மட்டன் கறி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ. இந்த ரெசிபியை பயன்படுத்தி மட்டன் கறி சமைத்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க.
ஒரு குக்கரில் ஒரு குழி கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் பட்டை இரண்டு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இதனுடன் 500 கிராம் தோல் உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இதில் மட்டன் கொத்துக்கறி அரை கிலோ சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த மட்டன் கறியை எண்ணெயுடன் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ள வேண்டும்.
இதனுடன் ஒரு தேக்கரண்டி மட்டன் மசாலா, மூன்று தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை நன்கு பிரட்டிக்கொள்ள வேண்டும்.
எவ்வளவோ பொடி வகைகள் பார்த்திருப்போம்! வாங்க ஒரு முறையாவது இந்த நல்ல காரம் பொடி ட்ரை பண்ணலாம்!
இறுதியாக குழம்பின் தேவைக்கு ஏற்ப கல் உப்பு, தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடிவிடலாம். குறைந்தது ஐந்து முதல் ஏழு விசில்கள் வைத்து இறக்கினால் சுவையான சின்ன வெங்காயம் மட்டன் கொத்துக்கறி தயார். இதை சமைப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களை போதுமானது.
ஆனால் சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் பொருந்தும் கட்சிதமான ஒரு அசைவ விருந்தாக இருக்கும்.