நொடியில் தயாராகும் பச்சை வெங்காய சட்னி அல்லது அவசர சட்னி! ரெசிபி இதோ…

வீட்டில் சில நேரங்களில் நாம் செய்த சட்னி உடனடியாக காலியாகும் பட்சத்தில் சாப்பிட வரும் நபர்களுக்காக நொடியில் தயாராகும் சட்னி தான் அவசர சட்னி. அவசரம் அவசரமாக இந்த சட்னி தயார் செய்தாலும் சாப்பிடுவதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும். இதை அவசர சட்னி அல்லது பச்சை வெங்காயம் சட்னி எனவும் கூறலாம். ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் அதே சுவையில் நல்ல காரசாரமான அவசர சட்னி நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கொத்து கருவேப்பிலை, 5 பல் வெள்ளை பூண்டு, , சிறிய நெல்லிக்காய் அளவு புளி, அரை தேக்கரண்டி கல்லுப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.

முதலில் இந்த பொருட்களை ஒன்று இரண்டாக அரைத்த பிறகு 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை மீண்டும் சேர்த்து அரைக்க வேண்டும். இப்பொழுது இறுதியாக ஒரு முறை சுவைக்கு ஏற்ப உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம்.

வீட்டில் உள்ள பிரஷர் குக்கரில் ஹோட்டல் ஸ்டைல் உதிரி உதிரியான பிரியாணி! ரெசிபி இதோ…

இப்பொழுது அருமையான அவசர சட்னி அல்லது பச்சை வெங்காய சட்னி தயார். இந்த சட்னிக்கு தாளிப்பு என தனியாக எதுவும் சேர்க்கத் தேவையில்லை அப்படியே சாப்பிட்டு விடலாம். சூடான இட்லியுடன் தாராளமாக இந்த சட்னி நடுவில் சிறிய குழி செய்து தேவைக்கேற்ப நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

அவசரமாக செய்தாலும் இந்த சட்னியில் சுவையில் மயங்கி மீண்டும் இதே சட்னி வேண்டும் என கேட்கும் அளவிற்கு சுவை நாவிலேயே நர்த்தனம் ஆடும்.