அக்கார அடிசில் அருமையான ஒரு பிரசாத வகையாகும். ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் இந்த அக்கார அடிசில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக அளவு பாலும், நெய்யும் சேர்த்து இந்த அக்கார அடிசிலை செய்வார்கள். சர்க்கரை பொங்கல் போல இருக்கும் இந்த அக்கார அடிசில் சுவை மற்றும் செய்முறையில் சர்க்கரை பொங்கலில் இருந்து வேறுபட்ட மிக சுவையான பிரசாதம் ஆகும். நவராத்திரிக்கு இந்த அக்கார அடிசிலை செய்து பாருங்கள். இதன் சுவையில் அனைவரும் அசந்திடுவார்கள்.
நவராத்திரி ஸ்பெஷல் நெய் மணக்கும் சுவையான சர்க்கரை பொங்கல்…!
அக்கார அடிசல் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் காய்ந்ததும் இதில் ஒரு கப் அளவு பொன்னி பச்சரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து பாலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அரிசி பாலிலேயே நன்றாக வேக வேண்டும். அரிசி பாலில் நன்றாக வெந்து வரும் பொழுது 400 கிராம் அளவு கற்கண்டை சேர்த்து கிளற வேண்டும். கற்கண்டுக்கு பதிலாக சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். இதில் கற்கண்டு கரைந்து இறுகி வரும் பொழுது 100 கிராம் அளவு நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறவும். இப்பொழுது தனியாக ஒரு கரண்டியால் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் விருப்பமான அளவு முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.
கோவில் சுவையில் அருமையான எலுமிச்சை சாதம் இந்த நவராத்திரிக்கு பிரசாதமாக செய்து அசத்துங்கள்!
அக்கார அடிசிலில் இப்பொழுது சிறிதளவு ஏலக்காய் தூள், குங்குமப்பூ மற்றும் மஞ்சள் கலர் பவுடர் சிறிதளவு சேர்த்து கிளறுங்கள். இறுதியாக நெய்யில் வறுத்து வைத்திருக்கும் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவை நிறைந்த அக்கார அடிசில் தயாராகி விட்டது.