இனிப்பு, புளிப்பு, கசப்பு என அனைத்து விதமான சுவையும் நாவில் நர்த்தனம் ஆட வைக்கும் நாகர்கோவில் ஸ்பெஷல் நார்த்தங்காய் பச்சடி!

நான் சாப்பிடும் உணவில் அறுசுவையும் இருக்க வேண்டும். அதற்காக பந்தியில் உணவு பரிமாறப்படும் பொழுது இனிப்பில் துவங்கி அனைத்து விதமான சுவையை உணர்த்தும் வகையில் காய்கறிகளை விதவிதமாக சமைத்து சாப்பிட வழங்குவார்கள். அதிலும் ஊற்காவிற்கு தனி இடம் உண்டு. நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாக அதிகப்படியானோர் நார்த்தங்காய் ஊறுகாய் உணவில் பயன்படுத்தி வருகின்றனர். நார்த்தங்காய் வைத்து பலவிதமான ரெசிபிகள் நாம் பார்த்து உள்ளோம் அதில் மிகவும் ஃபேமஸான நாகர்கோவில் ஸ்பெஷல் நார்த்தங்காய் பச்சடி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த நார்த்தங்காய் பச்சடி செய்வதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, காரத்திற்கு ஏற்ப இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். பச்சை மிளகாய் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் நார்த்தங்காயை இதில் சேர்த்துக் கொள்ளலாம். நார்த்தங்காயை மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

நார்த்தங்காய் சேர்த்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து குறைந்தது பத்து நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். மேலும் இந்த கலவையை மூடி போட்டு வேகவைத்து வதக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து நார்த்தங்காய் நன்கு வந்துள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இதில் ஒரு தேக்கரண்டி மிளகாய், ஒரு தேக்கரண்டி தனியா தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். இதில் இறுதியாக எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இட்லி , தோசைக்கு மட்டுமல்லாமல் பழைய சாதத்திற்கும் அருமையாக பொருந்தும் இரண்டு விதமான துவையல் வகைகள்…

இந்த கலவை குறைந்தது பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். நார்த்தங்காய் நன்கு வந்துள்ளதா என்பதை சரி பார்த்து அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக இரண்டு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான நார்த்தங்காய் பச்சடி தயார். இந்த பச்சடியில் காரம், இனிப்பு, புளிப்பு, கசப்பு என அனைத்து சுவைகளும் சிறப்பாக கலந்திருக்கும்.

Exit mobile version