இட்லி , தோசைக்கு மட்டுமல்லாமல் பழைய சாதத்திற்கும் அருமையாக பொருந்தும் இரண்டு விதமான துவையல் வகைகள்…

பொதுவாக நம் வீடுகளில் இட்லி மற்றும் தோசை சாப்பிடும் பொழுது அதற்கு துவையல் அல்லது சட்னி செய்வது வழக்கம். சில நேரங்களில் துவையல் போல கெட்டியாக அரைத்து தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் கலந்து சட்னியாக அதை மாற்றிக் கொள்வதும் சில நேரங்களில் நடக்கும். ஆனால் இட்லி மற்றும் தோசைக்கு மட்டுமல்லாமல் பழைய சாதத்திற்கும் அருமையாக பொருந்தக்கூடிய இரண்டு விதமான துவையல்கள் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

புளித் துவையல்

நல்ல புளிப்புடன் காரசாரமாக இருக்கும் இந்த புளித் துவையல் செய்வதற்கு ஒரு நிமிடம் போதுமானது.

ஒரு மிக்ஸி ஜாரில் ஆறு வெள்ளைப்பூண்டு, காலத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து வத்தல், பெரிய வெங்காயமாக இருந்தால் ஒன்று, சின்ன வெங்காயமாக இருந்தால் 10 சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சட்டென ஒரே நிமிடத்தில் இந்த துவையல் தயார். இதை இட்லி, தோசை, பழைய சாதம் உடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

தேங்காய் துவையல்.

கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஏழு பல் வெள்ளை பூண்டு, காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து காய்ந்த வத்தல் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அரை தேக்கரண்டி சீரகம், ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் சேர்த்து அதிக நேரம் வதக்க வேண்டாம். மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கினால் போதுமானது. இறுதியாக ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

கிழங்கே இல்லாமல் அருமையான உருளைக்கிழங்கு மசாலா… சப்பாத்தி மற்றும் பூரிக்கு அசத்தலான சைட்ஷ்….

இப்பொழுது இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னிக்கு ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கலந்து கொள்ளலாம்.

இந்த துவையல் இட்லி, தோசை, பழைய சாதம் இவற்றிற்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்துடனும் கலந்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.

Exit mobile version