ஐந்தே நிமிடத்தில் முறுமுறு ஈவினிங் ஸ்னாக்ஸ்.. வாங்க மைசூர் புல்லட் போண்டா ட்ரை பண்ணலாம்..

பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பால் மற்றும் காப்பியுடன் முறுமுறுவென ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என விரும்புவார்கள். அதற்கு கடையில் வாங்கும் ஸ்நாக்ஸ்களை கொடுப்பதற்கு பதிலாக சூடாக மாலை நேரங்களில் புதிதாக வீட்டிலேயே தயார் செய்யும் ஸ்நாக்ஸ் கொடுத்து குழந்தைகளின் மகிழ்விக்கலாம் வாங்க. இந்த முறை மைசூர் பேமஸ் புல்லட் போண்டா அதுவும் ஐந்தே நிமிடத்தில் செய்வதற்கான ரெசிபி இதோ…

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு குழி கரண்டி கொண்டு இரண்டு முறை நன்கு அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த தயிருடன் அரை கப் வறுத்த ரவை சேர்த்து கலக்க வேண்டும்.

அடுத்ததாக இந்த கலவையில் மூன்று தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதை அடுத்து அரை தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய அரை கப் வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, கைப்பிடி அளவு கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய அல்லது துருவிய சிறிய துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

மாவு கலவை தயார் செய்யும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து மாவு பிசைந்து கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் ஊற்றினால் மாவு பக்குவத்தில் இருக்காது.

கறுக்கு முறுக்கு என இருக்கும் காரா பூந்தி வைத்துக் கூட குருமா செய்யலாமா? வாயை பிளக்க வைக்கும் அசத்தல் ரெசிபி இதோ…

இந்த மாவு போண்டா பதத்திற்கு வரும்வரை நன்கு தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் தண்ணீர் அதிகமாக மாறினால் ஒரு தேக்கரண்டி கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் கலந்து வைத்திருக்கும் மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்க வேண்டும். மிதமான தீயில் நாம் தயார் செய்யும் பொழுது மட்டுமே மாவின் உள்பக்கமும் நன்கு வெந்திருக்கும்.

இல்லை என்றால் வடையின் வெளிப்பகுதியில் மாவு வெந்தும் உள்பக்கம் சற்று வேகாமலும் இருக்க வாய்ப்புள்ளது. இப்பொழுது சுவையான மைசூர் புல்லட் போண்டா தயார். இந்த போண்டாவிற்கு பூண்டு அதிகமாக சேர்த்த தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை அவ்வளவு அமிர்தமாக இருக்கும்.

Exit mobile version