தீபத்திருநாள் தீபாவளி பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில் நம் வீடுகளில் தித்திக்கும் இந்த தீபாவளிக்கு இனிப்பு பலகாரங்கள் செய்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று நெய் வாசத்தில் மைசூர் பாக் வீட்டிலேயே செய்வதற்கான எளிமையான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
ஒரு அகலமான கடாயில் ஒரு கப் கடலை மாவு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கடலை மாவில் நிறம் மாறாத வண்ணம் மிதமான தீயில் லேசாக வருத்தால் போதுமானது.
இப்பொழுது வறுத்த கடலை மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடலை மாவு கட்டிகள் விழாத வண்ணம் சலித்து எடுத்த பிறகு ஒரு கப் எண்ணெயில் நாம் சலித்து வைத்திருக்கும் கடலை மாவை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கப் நெய் சேர்த்து நன்கு உறுக்கி அதை சூட்டில் வைத்திருக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் ஒரு அகலமான கடாயில் இரண்டு கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
சர்க்கரை பாகு கொதித்து ஒரு கம்பி பதம் வந்ததும் நாம் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை சர்க்கரை பாகு சேர்த்து கிளற வேண்டும். கடலை மாவு சேர்த்த பிறகு கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும். சிறிது நேரத்திற்கு இடைவேளையில் நாம் உருக்கி வைத்திருக்கும் நெய் சேர்த்து கிளறி கொள்ளலாம்.
நாம் நெய் சேர்த்து கிளறும் போது நெய் கை பொறுக்கும் அளவு சூட்டில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மைசூர் பாக் சுவையாகவும் பார்ப்பதற்கு சிறப்பாகவும் இருக்கும்.
ஜவ்வரிசி வைத்து பால் பாயாசம் இல்லாமல் புதுவிதமாக கேசரி செய்யலாம் வாங்க! ஜவ்வரிசி கேசரி ரெசிபி இதோ…
மைசூர் பாக்கு நன்கு இறுகி அல்வா பதத்திற்கு கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது நாம் கலந்து வைத்திருக்கும் மைசூர்பாக்கு மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் பட்டர் சீட் அல்லது நெய் தடவி பரப்பிக் கொள்ள வேண்டும்.
30 நிமிடம் கழித்து நமக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான மைசூர் பாக் தயார்.