பொதுவாக ஜவ்வரிசி பால் பாயாசம் செய்யும் பொழுது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஊறவைத்த ஜவ்வரிசி வைத்து செய்யப்படும் பால் பாயாசம் சுவையில் தித்திப்பாகவும் சாப்பிடும் பொழுது நல்ல மிருதுவாகவும் இருக்கும். மேலும் ஜவ்வரிசி குடல் புண், வாய்ப்புண் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜவ்வரிசி வைத்து எளிமையாக செய்யக்கூடிய கேசரி ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
ஒரு பாத்திரத்தில் அரை கப் ஜவ்வரிசி சேர்த்து மூன்றும் அளவிற்கு தண்ணீர் கலந்து அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து ஜவ்வரிசியிலிருந்து தண்ணீரை நன்கு வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அதை நெய்யில் நாம் தண்ணீர் பிழிந்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை சேர்த்து வளர்க்க வேண்டும்.
ஏ பி சி மால்ட் வைத்து அருமையான அல்வா ரெசிபி! இந்த தீபாவளிக்கு செய்த அசத்தலாம் வாங்க…
ஒன்று முதல் இரண்டு நிமிடம் கைவிடாமல் வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து ஜவ்வரிசி வெந்து வரவேண்டும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும் தண்ணீர் வற்றி வரும் நேரத்தில் அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நன்கு கரைந்து வரும் நேரத்தில் இரண்டு சிட்டிகை கேசரி பவுடர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இறுதியாக வாசனைக்காக ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள், இரண்டு தேய்க்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஜவ்வரிசி கேசரி தயார். எப்போதும் ரவா கேசரி செய்யாமல் ஒருமுறை இந்த ஜவ்வரிசி கேசரி செய்யும்பொழுது சற்று மாறுதல் ஆக்கவும் சுவை கூடுதலாகவும் இருக்கும்.