பத்து நிமிடத்தில் காரசாரமான மட்டன் உப்புக்கறி! அசத்தலான ரெசிபி இதோ…

மட்டன் வைத்து பலவிதமான கறி வகைகள் செய்திருந்தாலும் ஒரு முறையாவது நம் வீட்டில் மட்டன் உப்புக்கறி செய்து பார்க்க வேண்டும். சுவையில் அற்புதமாக இருக்கும் இந்த காரசாரமான மட்டன் உப்புக்கறி சாம்பார் சாதம், தயிர்சாதம் என அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ் ஆக அமையும். இந்த மட்டன் உப்புக்கறி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

ஒரு குக்கரில் அரை கிலோ மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த மட்டனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

குக்கரில் குறைந்தது ஐந்து முதல் ஏழு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதன் பின் காரத்திற்கு ஏற்ப குறைந்தது 10 முதல் 15 பச்சை மிளகாயை இரண்டாக கீரி எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும்.

காரம் கம்மியாக வேண்டும் என நினைக்கும் பட்சத்தில் ஐந்து முதல் ஏழு பச்சை மிளகாய் பயன்படுத்தலாம். காரம் அதிகமாக வேண்டும் என நினைத்தால் 20 பச்சை மிளகாய் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சை மிளகாய் எண்ணெயில் பாதி வதங்கியதும் நம் வேக வைத்திருக்கும் மட்டனை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரே மண மணக்கும் கல்யாண வீட்டு கெட்டி சாம்பார்!

தண்ணீர் நன்கு வற்றிவரும் வரை கடாயில் மட்டனை நன்கு வதக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். இறுதியாக ஒரு தேக்கரண்டி மிளகு சீரகத்தூள் சேர்த்து கிளறி கொடுத்து இறக்கினால் சுவையான மட்டன் உப்புக்கறி தயார். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். மேலும் சாம்பார் சாதம், தயிர் சாதம் என வெரைட்டி சாதத்திற்கும் சிறந்த சைட் டிஷ் ஆக அமையும்.