சுட சுட மண் சட்டியில் வறுத்து அரைத்த மட்டன் வறுவல் குழம்பு! கைப்பக்குவம் மாறாத ரெசிபி இதோ!

மட்டன் வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்தாலும் ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் தனி சுவையை மட்டுமே கொடுக்கும். மட்டன் விரும்பிகளுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். அதுவும் இந்த முறை மண்சட்டியின் வறுத்து அரைத்த மசாலா வைத்து அருமையான மட்டன் வறுவல் குழம்பு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

இந்த முறை மட்டன் குழம்பு செய்வதற்கு மண் சிட்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன்படி ஒரு மண் சட்டியில் ஒரு கிலோ மட்டன் கறி, மூன்று தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி கல்லுப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் கலந்து மூடி போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.

மட்டன் குறிப்பாக பஞ்சு போல வெந்து இருக்க வேண்டும். அடுத்ததாக 300 கிராம் அளவுள்ள சின்ன வெங்காயத்தை அம்மியில் நன்கு தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது மீண்டும் ஒரு மண் சட்டியில் இரண்டு குழி கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், கசகசா, கல்பாசி, பிரியாணி இலை என பிரியாணி மசாலா அனைத்தையும் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நம் தட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் வதக்கும் பொழுது அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து கண்ணாடி பதத்தில் நன்கு வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இரண்டு தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

சூப்பரான சுவையின் பன்னீர் வைத்து அருமையான பொடிமாஸ் ரெசிபி!

அடுத்து இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா, இரண்டு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி சீரகத்தூள், மூன்று தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை இரண்டு நிமிடம் மிதமான தீயில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் வேக வைத்திருக்கும் மட்டன் கறியை தண்ணீருடன் கடாய்க்கு மாற்றிக் கொள்ளலாம். மட்டன் கறி சேர்த்த பிறகு பத்து முதல் 15 நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதித்து தண்ணீர் வற்றி வர வேண்டும். இப்பொழுது சுவையான மட்டன் வறுவல் குழம்பு தயார்.