மாலை நேர ஸ்னாக்ஸ் ரெசிபியாக முட்டை பக்கோடா! எளிமையான ரெசிபி இதோ…

பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுத்து மகிழ்விக்க விரும்பும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். நாம் கொடுக்கும் ஸ்னாக்ஸ் வகைகள் குழந்தைகளுக்கு நொறுக்கு தீனியாக மட்டுமில்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக இருக்கும் பொழுது மனதிப்தி கிடைக்கும். இந்த முறை ப்ரோட்டீன் சத்து நிறைந்த முட்டை வைத்து அருமையான பக்கோடா செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை முட்டை வைத்து ஆம்லெட் செய்வது போல நன்கு அடித்து எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் 5 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து கொள்ள வேண்டும். கடலை மாவு சேர்த்த பிறகு கட்டிகள் விழாதவாறு நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், பொடியாக துருவிய ஒரு சிறிய துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை இலைகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதில் முட்டைக்கு தேவையான அளவு உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மிளகு சீரகத்தூள் சேர்த்து இறுதியாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஒரு குழி கரண்டியை பயன்படுத்தி சிறு உருண்டைகளாக ஊற்ற வேண்டும்.

ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி! பாரம்பரியம் மாறாத அச்சு அசல் ரெசிபி இதோ…

முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான முட்டை பக்கோடா தயார். மாலை நேரங்களில் டீ மற்றும் காபி குடிக்கும் பொழுது இது போன்ற சத்தான ஸ்நாக்ஸ் வகைகள் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்.