முட்டை வைத்து இப்படி கூட செய்யலாமா என்ன சொல்லும் அளவிற்கு அசத்தலான ஒரு சைடிஷ் ரெசிபி!

முட்டை ஒன்று இருந்தால் போதும் அசைவத்தை மிஞ்சும் அளவிற்கு வகை வகையாக பலவிதமான ரெசிபிகள் செய்து முடிக்கலாம். சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் உடலுக்கும் முட்டை பலவிதமான ஊட்டச்சத்துக்களை தரக்கூடியது. நாள் ஒன்று இருக்கு குறைந்தது ஒரு முட்டை நாம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் தினசரி ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இந்த முறை முட்டை வைத்து சுவையான சைடிஷ் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

இந்த முட்டை மல்லி வருவல் செய்வதுக்கு தாராளமாக முட்டைகளை சேர்த்துக் கொள்ளலாம். அதாவது ஐந்து முதல் ஏழு முட்டையை வேக வைக்க வேண்டும். முட்டை வெந்து வரும் நேரத்தில் தேவையான மசாலா பொருட்களை நாம் தயார் செய்து கொள்ளலாம்.

முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி முழு தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு, 5 பல் வெள்ளை பூண்டு, ஐந்து காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வருத்த பொருட்கள் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ளலாம். இதற்குள் மூட்டை நன்கு வெந்து இருக்கும். அதன் தோல் பகுதிகளை நீக்கி சுத்தம் செய்து முட்டையை இரண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, இரண்டு கொத்து கருவேப்பிலை, நான்கு காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முட்டைகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மூன்று பொருள் போதும் அடிக்கும் வெயிலுக்கு குளுகுளு ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்யலாம்!

முட்டை சேர்த்த பிறகு அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் முதலில் வறுத்து அரைத்த மசாலாவை முட்டையுடன் சேர்த்துக் கொள்ளலாம். மசாலா சேர்த்த பிறகு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான முட்டை மல்லி வறுவல் தயார்.