மூன்று வேலையும் விதவிதமாக சமைக்காமல் ஒரே குழம்பு வைத்து மூன்று வேலையும் சமாளிக்கும் அளவிற்கு சிறந்த சுவையில் ஒரு ரெசிபி சமைக்க வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு இந்த விளக்கம் மிகவும் உதவியாக இருக்கும். இட்லி, தோசை, தோசை, பூரி, ஆப்பம், சாதம் என அனைத்திற்கும் பொருந்தும் குட்டை வைத்து செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், 2 துண்டு பட்டை, இரண்டு பிரியாணி இலை, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு பெருஞ்சீரகம், இரண்டு தேக்கரண்டி தனியா, சிறிதளவு கல்பாசி, கைப்பிடி அளவு கறிவேப்பிலை, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து முதல் ஏழு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும்.
இறுதியாக ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வருத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்தெடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது குழம்பு செய்வதற்கு மசாலா தயாராக உள்ளது.
மீண்டும் அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கோடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை அடக்கிக் கொள்ளலாம். அடுத்த நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை மிக்ஸியில் ஒன்று இரண்டாக அடித்து கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து மிதமான தீயில் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். குறைந்தது 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க வேண்டும்.
பாட்டி மட்டுமில்லாமல் கொள்ளுப்பாட்டுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய ரெசிபி!
15 நிமிடங்களில் கடாயில் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் அப்பொழுது குழம்பு தயாராக மாறிவிட்டது. இந்த நேரத்தில் அவித்த முட்டைகளை இரண்டாக கீரி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டை சேர்த்த பிறகு கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது, 3 பச்சை மிளகாய் இரண்டாக கீறியது சேர்த்து மீண்டும் முடி போட்டு இரண்டு நிமிடம் அப்படியே கொதிக்க விட வேண்டும்.
இப்பொழுது சுவையான செட்டிநாடு ஸ்டைல் காரசாரமான முட்டை குழம்பு தயார்.