மீன் குழம்பின் அதே சுவையில் ஸ்பெஷல் முட்டை கிரேவி! ரெசிபி இதோ…

அசைவ பிரியர்களுக்கு எப்போதும் மீன் குழம்பின் மீது அதீத விருப்பம் தான். அதுவும் ஒரு நாள் மீன் குழம்பு வைத்து அடுத்த நாள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறை மீன் சரியாக கிடைக்காத சமயங்களில் மீன் குழம்பின் அதே சுவையில் முட்டை வைத்து எளிமையான மீன் குழம்பு ரெசிபி. பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் அதே சுவையில் முட்டை கிரேவி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

ஒரு அகலமான கடாயின் ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, இரண்டு கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய 300 கிராம் அளவுள்ள சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இஞ்சி, பூண்டுவின் பச்சை வாசனை சென்றவுடன் வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டும். இந்த நேரத்தில் 250 கிராம் அளவுள்ள பொடியாக நறுக்கிய தக்காளிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளி வதக்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது வெங்காயம் மற்றும் தக்காளி இணைந்து தொக்கு பதத்திற்கு வரும்வரை நன்கு வதக்கிக் கொள்ளலாம்.

இந்த நேரத்தில் மூன்று தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஒரு வடகம் போதும்! மொறு மொறு தக்காளி வடகம் செய்வதற்கான ரெசிபி . இதோ!

இப்பொழுது குட்டி தாளிக்கும் கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை குழியில் சேர்த்து இன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் கரண்டி ஆம்லெட் தயார்.

இப்பொழுது குழம்பு நன்கு கொதித்து கெட்டியாக வரும் நேரத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கரண்டி ஆம்லெட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டை சேர்த்து பிறகு மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதித்தால் போதுமானது.. இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மீன் குழம்பு சுவையில் முட்டை குழம்பு தயார்.