பத்து நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆக மஸ்ரூம் தொக்கு ரைஸ்!

வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் என அனைவருக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆக இந்த மஸ்ரூம் வைத்து அருமையான மற்றும் காரசாரமான தொக்கு ரைஸ் செய்து ஒரு முறை கொடுத்து பாருங்கள். இதன் சுவையும் மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு சிறப்பாக இருக்கும். மேலும் இந்த சாதம் செய்வதற்கு பத்து நிமிடங்களை போதுமானது. வாங்க எளிமையான முறையில் மஸ்ரூம் தொக்கு ரைஸ் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

முதலில் மஸ்ரூம் ரைஸ் செய்வதற்கு தேவையான மஸ்ரூம்களை கழுவி சுத்தம் செய்து நீலவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சிறிது நேரம் கொதிக்கும் தண்ணீரில் அப்படியே போட்டு வைக்கலாம். அடுத்ததாக தேவையான வெங்காயம், மற்றும் தக்காளிகளை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து இரண்டு காஷ்மீரி வத்தல் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த தக்காளி பழம் மூன்று, ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, வெந்நீரில் ஊற வைத்து காஷ்மீரி மிளகாய் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு இரண்டு, பட்டை இரண்டு, ஏலக்காய் 2, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், 10 பல் முந்திரிப்பருப்பு சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் வதக்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளி நன்கு பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து நல்ல பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காராமணி வைத்து அருமையான பிரியாணி ரெசிபி!

அடுத்ததாக மஷ்ரூம் கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தேவைப்பட்டால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப குடைமிளகாய் புதிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மசாலாவுடன் இணைந்து மற்றும் ஒரு சேர கலந்து கொடுத்து ஒரு நிமிடம் வரை அப்படியே வேக வைக்க வேண்டும்.

கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து பொழுது மஸ்ரூம் தொக்கு தயாராக மாறி உள்ளது. எந்த நேரத்தில் ஆரம்பித்த சாதம் ஒரு கப் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இரண்டு தேக்கரண்டி நெய், கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான மஷ்ரூம் தொக்கு சாதம் தயார்.