அசைவ டிக்காவின் சுவையை தோற்கடிக்கும் விதத்தில் சைவ ரெசிபி! பாகிஸ்தானி மஸ்ரூம் டிக்கா!

அசைவத்தின் அதே சுவையில் சைவத்தில் மஸ்ரூம், காலிஃப்ளவர், முட்டை போன்ற பொருட்களை வைத்து அடுத்தடுத்து அசத்தும் விதமான பல ரெசிபிகள் செய்யலாம். இந்த வகையில் இன்று சிக்கன் டிக்கா மற்றும் மஸ்ரூம் டிக்காவுடன் சுவையில் போட்டி போடும் விதத்தில் அருமையான மற்றும் டிக்கா பாகிஸ்தானி சுவையில் நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து உருகியதும் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மாவின் நிறம் மாறாமல் ஒரு நிமிடம் கலந்து கொடுத்தால் போதுமானது.. அடுத்ததாக அதில் இரண்டு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் கெட்டி தயிர் சேர்த்து அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நாம் முதலில் தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கலந்து கொள்ளலாம். இதனுடன் இப்பொழுது தேவையான மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை கெட்டியாக இருக்கும் பட்சத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது மசாலாவுடன் இணைந்து மஸ்ரூம் குறைந்தது 15 மணி நேரம் அப்படியே ஊற வேண்டும். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம், 10 முதல் 15 முந்திரி சேர்த்து அரைத்து விழுதுகளாக எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து கடலை மாவு வறுத்த அதே கடாயில் கூடுதலாக இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நாம் ஊற வைத்திருக்கும் மஷ்ரூமை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மஸ்ரூம் சேர்த்த பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடம் கலந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண் வச்சிருக்கேன்டி எண்ணெய்சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி மற்றும் முந்திரி விழுதுகளை இந்த கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த காய் வைத்து அருமையான ரசம் ரெசிபி!

இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். 10 நிமிடங்களில் என்னை நன்கு பிரிந்து வரும் சமயத்தில் அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து நாம் வதக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை இந்த கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு சேர மசாலாவை நன்கு மஸ்ரூம் உடன் இணைத்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது கிரேவிக்கு தேவையான அளவு உப்பு, காரத்திற்கு ஏற்ப அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பத்து நிமிடத்தில் கிரேவி நன்கு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பாகிஸ்தான் ஸ்டைல் மஸ்ரூம் டிக்கா தயார்.