பிரியாணியின் அதே சுவையில் மசாலா ஏதும் இல்லாமல் மஷ்ரூம் வைத்து அருமையான புலாவ் ரெசிபி!

பிரியாணி சாப்பிட வேண்டும் ஆனால் எந்தவிதமான மசாலாவும் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த புலாவ் ரெசிபி உதவியாக இருக்கும். பிரியாணியின் அதே சுவையில் அதிகப்படியான மசாலாக்கள் இல்லாமல் சுவையான மஸ்ரூம் வைத்து புலாவ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பிரியாணியை சாப்பிடுவது போல இந்த புலாவிற்கும் இருக்கும் சிக்கன் குழம்பு அல்லது கத்திரிக்காய் ரைத்தா, தயிர் வெங்காயம், முட்டை வைத்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.

ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் அண்ணாச்சி பூ ஒன்று, ஏலக்காய் 2, பட்டை ஒன்று சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 10 முதல் 15 முந்திரிப்பருப்பு, கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்க வேண்டும்.

முந்திரிப்பருப்பு நிறம் மாறியதும் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கினால் போதுமானது பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஆறு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாய் பாதியாக வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெயோடு நன்கு வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்துக் கொள்ளலாம். மஷ்ரூம் சேர்த்த பிறகு ஒரு நிமிடம் எண்ணெயோடு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் குலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

தலைக்கு தேய்த்து குளிக்கும் கற்றாழை வைத்து தித்திப்பான வாயில் வைத்ததும் கரையும் அல்வா ரெசிபி!

அடுத்ததாக அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசியை குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
மஸ்ரூம் புலாவ் சுவை கூடுதலாக வரவேண்டும் என நினைக்கும் பட்சத்தில் தண்ணீருக்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்து சமைக்கலாம். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் வீதம் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி மற்றும் தண்ணீர் அல்லது தேங்காய் பால் அளவு ஏற்றபடி சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடிவிட வேண்டும்.

இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ளலாம். குக்கரின் அழுத்தம் குறைந்ததும் மஸ்ரூம் புலாவின் மீது ஒரு தேக்கரண்டி நெய் கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை தூவி மீண்டும் ஒருமுறை கிளறி கொடுத்து பரிமாறினால் சுவையான பிரியாணி வாசத்தில் மசாலா சேர்க்காத மற்றும் புலாவ் தயார்.

இந்த புலாவ் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடங்களை போதுமானது என்பதனால் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் கொடுத்துவிடலாம்.

Exit mobile version