ஹோட்டல் போல ஃபுட் கிரீம் எதுவும் சேர்க்காமல் வீட்டிலேயே கிரீமியான மஸ்ரூம் கிரேவி ரெசிபி!

ஹோட்டல்களில் மஸ்ரூம் கிரேவி சற்று கெட்டியாகவும், பார்ப்பதற்கு வண்ணம் சற்று கூடுதலாகவும், சாப்பிடும் பொழுது கிரீமி போன்ற சுவையுடன் இருக்கும். ஆனால் இதற்காக பலவிதமான சாஸ்கள் சேர்க்கப்படுவது உண்மை. . இந்த சாஸ்கள் நம் வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டிலேயே எளிமையான முறையில் கிரீமியான மஸ்ரூம் கிரேவி செய்வதற்கான ரெசிபி இதோ….

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் இரண்டு தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.

வீட்டில் யாருக்காவது இருமல், தும்மல், சளி, உடல் அசதி ஏற்பட்டால் பாட்டியும் கை மருந்தான மருந்து குழம்பு ரெசிபி!

இந்த கலவையுடன் 20 முந்திரிப் பருப்பை அரை மணி நேரத்திற்கு முன்பாக ஊறவைத்து அந்த முந்திரிப் பருப்பை மையாக அரைத்து அந்த கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இரண்டு நிமிடம் கழித்து நம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை இதில் சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் இந்த கலவையை கலந்து கொடுத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான கிரீமியான மஸ்ரூம் கிரேவி தயார்.