புரோட்டின் சத்து நிறைந்த மஸ்ரூம் வைத்து காரசாரமான கிரேவி மட்டும்தான் செய்ய முடியுமா? வாங்க அருமையான சட்னி செய்யலாம்!

மஸ்ரூமில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மஸ்ரூம் வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாக பிரியாணி, கிரேவி, மஸ்ரூம் 65 மட்டுமே செய்து வந்த நமக்கு சற்று வித்தியாசமான முறையில் மற்றும் வைத்து அருமையானது நிறைந்த சட்னி ஒன்று செய்யலாம் வாங்க… இந்த சட்னி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த சட்னி செய்வதற்கு 200 கிராம் மஷ்ரூமில் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து நான்காக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் காரத்திற்கு ஏற்ப 6 முதல் 8 காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெயுடன் வதக்க வேண்டும். அதன் பின் 150 கிராம் அளவுள்ள பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் நறுக்கி சுத்தம் செய்து வைத்திருக்கும் மஷ்ரூமை இதில் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் மற்றுமை நன்கு வதக்க வேண்டும்.

அடுத்ததாக 5 பல் வெள்ளை பூண்டு, சிறிய துண்டி இஞ்சி, சிறிய எலுமிச்சை பழ அளவு புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மஸ்ரூம் நன்கு வெந்து சுருண்டு வரும் அளவிற்கு வதக்க வேண்டும். இறுதியாக ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

மஷ்ரூம் நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரைக்கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும். இப்பொழுது மஸ்ரூம் சட்னி தயார்.

திருநெல்வேலி ஸ்பெஷல் மாப்பிள்ளை விருந்து உளுந்து சோறு , மட்டன் கறிக்குழம்பு! அசத்தலான ரெசிபி இதோ…

இதற்கு தேங்காய் எண்ணெய், கடுகு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்து கிளறினால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.

இந்த சட்னிக்கு இட்லி தோசையுடன் வைத்து சாப்பிடும் பொழுது சுவை நாக்கை விட்டு நகலாமல் இருக்கும் .