திருநெல்வேலி ஸ்பெஷல் தீபாவளி பலகாரம் முந்திரி கொத்து! ரெசிபி இதோ…

தீபாவளிக்கு திருநெல்வேலி மிகவும் பிரபலமாக அனைத்து வீடுகளிலும் கட்டாயம் செய்யப்படும் பலகாரங்களில் ஒன்றான முந்திரிக்கொத்து அதாவது சலங்கை பணியாரம் நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மிகவும் தித்திப்பான இந்த பலகாரம் சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் சற்று நிறைந்ததாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி இதை சாப்பிடுவார்கள்.

ஒரு கப் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒரு அகலமான கடாயில் ஒரு கப் பாசி பயிரை நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பாசிப்பயிரிலிருந்து வாசனை வந்ததும் அதை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக அரை கப் பச்சரிசி சேர்த்து அதையும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கப் பாசிப்பயிருக்கு ஒன்றரை கப் அளவு வெல்லம் என்பது கணக்கு. அதன்படி அதே கடாயில் வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து பாகு பதத்திற்கு கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் பாசிப்பயிறு, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சர்க்கரை பாகு கம்பி பதம் வந்ததும் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மாவின் மீது ஊற்றிக் கொள்ளலாம்.

தோசை மாவு, சப்பாத்தி மாவு என எதுவும் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் ஹெல்த்தியான பிரேக் ஃபாஸ்ட் ரெசிபி!

அச்சு வெல்லப்பாகு சேர்த்து நன்கு கெட்டிப் பதமாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு மாவை பதமாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது முதலில் நாம் ஊற வைத்திருந்த பச்சரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பச்சை பயிறு மாவை உருண்டையாக பிடித்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவில் நன்கு உருட்டி எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும். இப்படி நாம் தயார் செய்து வைத்திருக்கும் அனைத்து உருண்டைகளையும் பச்சரிசி மாவில் முக்கி பொறித்து எடுத்தால் சுவையான முந்திரி கொத்து தயார்.