மட்டன் வைத்து கிராமத்து பக்குவத்தில் வறுத்த கறி! எளிமையான மற்றும் அட்டகாசமான சுவையில் செய்வதற்கான ரெசிபி இதோ…

கறி விருந்து என்றாலே நம் மனதிற்கு முதலில் நினைவு வருவது மட்டன் விருந்துதான். அப்படி சாப்பிடும் விருந்து சாப்பாடு பல நாட்களுக்கு நம் மனதில் நினைவாகவும் நாவில் சுவையாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க இந்த முறை மட்டன் வைத்து அருமையான வறுத்த கறி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் அரை கிலோ அளவுள்ள மட்டனை மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் சுத்தம் செய்த மட்டன், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் அழுத்தம் குறைந்த பிறகு மட்டன் தனியாகவும் அதை வேகவைத்த தண்ணீர் தனியாகவும் பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம்..

அதற்காக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தனியா, அரை தேக்கரண்டி மிளகு, அரைத்தக்கரண்டி சீரகம், காய்ந்த வத்தல் 5 சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வருத்த பொருட்களை சிறிது நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளலாம்.

அரைக்கும் பொழுது ஒரு சிறிய துண்டு இஞ்சி 5 பல் வெள்ளை பூண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பத்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மீதம் இருக்கும் அதே நெய் வேக வைத்த மட்டனை சேர்த்து இரண்டு கொத்து கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் குறைந்தது மூன்று அல்லது நான்கு நிமிடம் நன்கு வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

மசாலா நன்கு கறியோடு இணைந்து பச்சை வாசனை சென்றவுடன் கறி வேக வைத்த தண்ணீரை கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி நெய் தேவையான அளவு உப்பு கலந்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

தைப்பொங்கல் ஸ்பெஷல் திருவாதிரை ஏழு நாட்டு காய்கறிகள் கூட்டு! சுவை மாறாத ரெசிபி இதோ…

தண்ணீர் நன்கு வற்றி கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, இரண்டாக கீறிய பச்சை மிளகாய் இரண்டு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த வருத்தக்கறியை மேலும் சுவைப்படுத்துவதற்காக ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய் ஒரு கிராம்பு இவற்றை பொடி செய்து இரண்டு சிட்டிகை அந்த பொடியை கறியில் சேர்த்து கிளறி கொடுத்து இறக்கினால் சுவை அருமையாக இருக்கும். இப்பொழுது மட்டன் வறுத்த கறி தயார்.

ஒருமுறை இது போன்ற ரெசிபியை பயன்படுத்தி வறுத்த கறி சமைத்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்தில் மட்டன் வறுத்த கறி அமிர்தமாக இருக்கும்.

Exit mobile version