கார சாரத்திற்கு குறைவே இல்லாமல் பாரம்பரிய முறையில் அதே சுவையின் மிளகு குழம்பு! ரெசிபி இதோ..

ஜலதோஷம், சளி, காய்ச்சல், இருமல், உடல் அசதி போன்ற உடல் உபாதைகளின் போது நல்ல காரசாரமாக சாப்பிட வேண்டும் என்ற நாவிற்கு தோன்றும். அந்த மாதிரி சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சுவை மிகுந்ததாக மட்டும் இல்லாமல் மருத்துவ குணம் நிறைந்ததாக இருந்தால் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். இந்த முறை பாரம்பரிய முறையில் மிளகு குழம்பு வீட்டிலேயே செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அதில் இரண்டு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்பு, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் நான்கு, இரண்டு தேக்கரண்டி மிளகு, கட்டி பெருங்காயம் சிறிய துண்டு சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடலாம். நாம் வதக்கிய பொருட்களை சிறிது நேரம் சூடு ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி கல்லுப்பு, எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி, நாம் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐந்தே நிமிடத்தில் மகாராஷ்டிரா ஸ்டைலில் மொறு மொறு வாழைக்காய் வறுவல்!

மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதித்தால் மிளகு குழம்பு தயார். இந்த மிளகு குழம்பு தக்காளி வெங்காயம் என எதுவும் பயன்படுத்தாமல் எளிமையான முறையில் நொடியில் தயார் செய்து விடலாம்.