காரைக்குடி அரண்மனை விட்டு ஸ்பெஷல் பச்சை மிளகாய் தொக்கு!

தென்னிந்திய சமையல் முறைகளில் காரைக்குடி சமையலுக்கு தனி மதிப்பு உண்டு. சுவையிலும் மனத்திலும் மனதை மிஞ்சும் அளவிற்கு தரமாகவே இருக்கும். அந்த வகையில் காரைக்குடி அரண்மனை வீடுகளில் ஸ்பெஷலாக செய்யப்படும் பல ரெசிபிகளில் ஒன்றுதான் பச்சை மிளகாய் தொக்கு. இந்த பச்சை மிளகாய் தொக்குவை நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி கடலெண்ணெய் சேர்த்து சூடு படுத்த வேண்டும். இதில் பத்து முதல் 15 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாய் வதங்கும் நேரத்தில் காரவத்தல் ஐந்து முதல் பத்து சேர்த்துக் கொள்ளலாம். வத்தல் சேர்க்கும் பொழுது அதன் உள் இருக்கும் விதை பகுதியை நீக்கிவிட்டு மேலே இருக்கும் சிவப்பு நிறமான தோல் பகுதியை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது பச்சை மிளகாய் மற்றும் வத்தலை 2 நிமிடம் எண்ணெயோடு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மிளகாய் நன்கு வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விடலாம். சிறிது நேரம் கழித்து நாம் வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைக்க வேண்டும்.

மீண்டும் அதே கடாயில் அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு தாளித்து கிளறி கொடுக்க வேண்டும்.

இதன் பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் விழுதுவை தாளிப்பின் மீது சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸி ஜாரை கழுவி கிடைக்கும் தண்ணீரையும் கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பச்சை மிளகாய் தொக்கிற்கு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

தொடர் மழையின் போது தொண்டைக்கு இடமாக சளி தொல்லையிலிருந்து விடுபட உதவும் தேங்காய் பால் ரசம்!

அடுத்ததாக 250 கிராம் புளி நன்கு ஊற வைத்து பிசைந்து கெட்டியான புளி தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கோபுர அளவில் ஒரு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடம் கிளறி கொடுக்கும்பொழுது சட்னி பதத்திற்கு கெட்டியாக இறுகி வரும். இறுதியாக கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் பச்சை மிளகாய் தொக்கு தயார்.

இந்த தொக்கு வைத்து அருமையாக இட்லி, தோசை, சப்பாத்தி சூடான சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.