மருத்துவ குணம் நிறைந்த மற்றும் சுவையான மத்தி மீன் உடலுக்கு பலவகையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. இந்த மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட்டு எலும்பு வளர்ச்சி மற்றும் எலும்பு வலிமைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த மத்தி மீனில் சக்கர நோயாளிகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி வைட்டமின் பி2 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தகைய மகத்துவம் நிறைந்த மத்தி மீன் வைத்து ரசம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் தேவையான அளவு மத்தி மீன் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் 15 முதல் 20 சின்ன வெங்காயம், நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம், ஒன்றை தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ரசத்திற்கு தேவையான மசாலா தயார் செய்யும் பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் பயன்படுத்தி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதுகளை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். இதனுடன் எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளிக்கரைசல் ஒரு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் இரண்டு கொத்து கருவேப்பிலை, ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ரசத்திற்கு தேவையான அளவு கூடுதல் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
புரோட்டின் சத்து அதிகமாக நிறைந்த பட்டர் பீன்ஸ் வைத்து அருமையான தேங்காய் பால் புலாவ் ரெசிபி!
ரசம் நன்கு கொதித்து வர நேரத்தில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மத்திமீனை சேர்த்துக் கொள்ளலாம். மீன் சேர்த்த பிறகு மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடம் அப்படியே கொதிக்க வேண்டும்.20 நிமிடம் கழித்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மத்தி மீன் ரசம் தயார்.
சளி மற்றும் காய்ச்சல் போன்ற நேரங்களில் இதுபோன்ற மீன் ரசம் வைத்து சாப்பிடும் பொழுது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியும் ஊட்டச்சத்தும் கிடைக்கும்.