மஷ்ரூம் வைத்து விதவிதமாக ரெசிபிகள் செய்தாலும் அதன் மீது உள்ள ஆர்வம் நமக்கு குறைவது இல்லை. அசைவத்தின் அதையே சுவையை பிரதிபலிக்கும் இந்த மஸ்ரூம் சைவப் பிரியர்களின் விருப்பமான உணவுகளில் ஒன்று. இந்த மஷ்ரூம் வைத்து அசைவத்திற்கே போட்டி போடும் விதத்தில் பலவிதமான ரெசிபிகள் செய்து அசத்தலாம். அந்த வகையில் இன்று சற்று புது விதமான முறையில் ரெஸ்டாரன்ட் தரத்தில் அருமையான மற்றும் 65 கிரேவி தயார் செய்யலாம் வாங்க. இந்த கிரேவி ஒன்று போதும் சாதம் முதல் சப்பாத்தி வரை அனைத்திற்கும் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கும். வாங்க எளிமையான முறையில் மஷ்ரூம் 65 கிரேவி செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்…
முதலில் ஒரு மசாலா கலவையை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளலாம். இப்பொழுது இதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்துக் கொள்ளலாம். மசாலாவோடு இணைத்து மஸ்ரூமை நன்கு ஒருசேர பிசைந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் மசாலா தடவிய மஸ்ரூமை அப்படியே பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து விட வேண்டும். அப்படி இல்லாமல் வெளியே வைத்து விட்டால் சிறிது நேரத்தில் மஸ்ரூமில் இருந்து தண்ணீர் வெளியே வர துவங்கும்.
இந்த நேரத்தில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அளவில் நடுத்தரமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், ஐந்து முதல் பத்து வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஆறாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி வதங்கும் நேரத்தில் ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளி மசிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் இருக்கு அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த பொருட்களை நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து நிமிடம் கழித்து நம் பிரிட்ஜில் வைத்திருக்கும் மஷ்ரூமை வெளியே எடுத்து தேவையான அளவு எண்ணெய் கலந்து குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி வெங்காயம் விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை சேர்த்து நன்கு பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
மணக்க மணக்க சூடான ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்! அசத்தல் ரெசிபி இதோ…
இதை அடுத்து கிரேவி தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த மசாலா கலவை நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் பொரித்து வைத்திருக்கும் மஸ்ரூம் 65 சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நிமிடம் வரை கலந்துகொடுத்த பிறகு கைப்படி அளவு கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடலாம்.
இப்பொழுது சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தரமான மஷ்ரூம் 65 கிரேவி தயார்.